சாமளாபுரம்
Jump to navigation
Jump to search
| சாமளாபுரம் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருப்பூர் |
| வட்டம் | பல்லடம் வட்டம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
20,691 (2011[update]) • 951/km2 (2,463/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 21.75 சதுர கிலோமீட்டர்கள் (8.40 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/samalapuram |
சாமளாபுரம் (ஆங்கிலம்:Samalapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
சாமளாபுரம் பேரூராட்சிக்கு கிழக்கில் திருப்பூர் 16 கி.மீ.; மேற்கில் சூலூர் 17 கி.மீ.; வடக்கில் அவிநாசி 20 கி.மீ. ; தெற்கில் பல்லடம் 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 5 கி.மீ. தொலைவில் உள்ள சோமனூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
21.75 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,938 வீடுகளும், 20,691 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Samalapuram Population Census 2011