குளத்துப்பாளையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குளத்துப்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருப்பூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

17,819 (2011)

469/km2 (1,215/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 38 சதுர கிலோமீட்டர்கள் (15 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kolathupalayam

குளத்துப்பாளையம் (ஆங்கிலம்:Kolathupalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரராட்சியில் கொளத்துப்பாளையம் மற்றும் ஆலாம்பாளையம் ஆகிய இரண்டு வருவாய் கிராமங்கள் உள்ளது.

அமைவிடம்

பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 60. கிமீ; கிழக்கில் மூலனூர் 14 கிமீ; மேற்கில் தாராபுரம் 6 கிமீ; வடக்கில் வெள்ளக்கோயில் 25 கிமீ; தெற்கில் பழநி 42 கிமீ., தொலைவில் உள்ளது.

இப்பேருராட்சியின் கிழக்கு எல்லையாக மூலனூர் பேருராட்சியும் தெற்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னிவாடி, நல்லாம்பாளையம் மற்றும் மணக்கடவுவும், மேற்கு எல்லையாக தாராபுரம் நகராட்சியும், வடக்கு எல்லையாக தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீராட்சிமங்கலம் & அமராவதி ஆறும் உள்ளது. இப்பேருராட்சியில் அதிக அளவிலான அரிசி ஆலைகள் உள்ளது. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விதை நெல்கள் அனுப்பப்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்பு

38 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 77 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,457 வீடுகளும், 17,819 மக்கள்தொகையும் கொண்டது.[4]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. குளத்துப்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Kolathupalayam Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=குளத்துப்பாளையம்&oldid=91994" இருந்து மீள்விக்கப்பட்டது