அம்பாசமுத்திரம் வட்டம்
Jump to navigation
Jump to search
அம்பாசமுத்திரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] கி.பி.1861 வரை பிரம்மதேசம் என்ற ஊரே அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராக இருந்தது. அதன் பின்புதான் அம்பாசமுத்திரம் வட்டத்தின் தலைநகராயிற்று. [2]இதன் வட்டாட்சியர் அலுவலகம் அம்பாசமுத்திரத்தில் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் என 4 குறுவட்ட ங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. [3]
இவ்வட்டத்தில் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கடையம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
சமயம்
- இந்துக்கள் = 80.41%
- இசுலாமியர்கள் = 8.72%
- கிறித்தவர்கள் = 10.68%
- பிறர்= 0.18%