கல்லிடைக்குறிச்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல்லிடைக்குறிச்சி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

27,816 (2011)

4,240/km2 (10,982/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 6.56 சதுர கிலோமீட்டர்கள் (2.53 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/kallidaikurichi

கல்லிடைக்குறிச்சி (ஆங்கிலம்:Kalladaikurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் பிற்கால பாண்டிய மன்னர் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கட்டிய 500 ஆண்டுகள் பழமையான குலசேகரமுடையார் கோயில் உள்ளது. இங்கு அப்பளம் பிரபலமானது.

அமைவிடம்

மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியின் வடக்கில் தென்காசி 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்வதற்கான, கல்லிடைக்குறிச்சி தொடருந்து நிலையம் உள்ளது. [3]

பேரூராட்சியின் அமைப்பு

6.56 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7708 வீடுகளும், 27,816 மக்கள்தொகையும் கொண்டது.[5]

கோயில்கள்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. KIC/Kallidaikurichi கல்லிடைகுறிச்சி தொடருந்து நிலையம்
  4. கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் இணையதளம்
  5. கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்


"https://tamilar.wiki/index.php?title=கல்லிடைக்குறிச்சி&oldid=116357" இருந்து மீள்விக்கப்பட்டது