திருப்புவனம் வட்டம்
Jump to navigation
Jump to search
திருப்புவனம் வட்டம் , தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருப்புவனம் நகரம் உள்ளது.
மானாமதுரை வட்டத்தின் 43 வருவாய் கிராமங்களைக் கொண்டு 9 மே 2012 அன்று திருப்புவனம் வட்டம் நிறுவப்பட்டது.[1]
இந்த வட்டத்தின் கீழ் திருப்புவனம், கொந்தகை, திருப்பாச்சேத்தி என 3 உள்வட்டங்களும் 43 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் கீழடி அகழாய்வு மையம் உள்ளது.