சோழிங்கநல்லூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சோழிங்கநல்லூர் வட்டம் (Sholinganallur taluk) தமிழ்நாட்டின், சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். 2009ல் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாம்பரம் வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் சோழிங்கநல்லூர் வருவாய் வட்டம் நிறுவப்பட்டது. இதன் வட்டாட்சியர் அலுவலகம் சோழிங்கநல்லூரில் இயங்குகிறது. இவ்வட்டம் 2 குறுவட்டங்களும், 15 வருவாய் கிராமங்களும் கொண்டது.[1]

4 சனவரி 2018ல் சோழிங்கநல்லூர் வட்டம், சென்னை மாவட்டத்தின், கிண்டி வருவாய் கோட்டத்தில் இணைக்கப்பட்டது.[2][3]

சோழிங்கநல்லூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்

மக்கள்தொகை பரம்பல்

சோழிங்கநல்லூர் வட்டத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 5,63,342 ஆகும். அதில் ஆண்கள் 2,85,167 ஆகவும்; பெண்கள் 278,175 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 953 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 88.44% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 64,665 ஆகவுள்ளனர். நகர்புறங்களில் 87.5% மக்களும்; கிராமப்புறங்களில் 12.5% மக்களும் வாழ்கின்றனர்.[4] இவ்வட்டத்தில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 74,531 மற்றும் 2,258 ஆகவுள்ளனர்.

சோழிங்கநல்லூர் வட்டத்தின் மக்கள்தொகையில் இந்துக்கள் 480,291 (85.26%) ஆகவும், இசுலாமியர்கள் 25,070 (4.45%) ஆகவும், கிறித்தவர்கள் 50,501 (8.96%) ஆகவும், மற்றவர்கள் 1.29% ஆகவும் உள்ளனர். இவ்வட்டத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சோழிங்கநல்லூர்_வட்டம்&oldid=126716" இருந்து மீள்விக்கப்பட்டது