மாதவரம் வட்டம்
Jump to navigation
Jump to search
மாதவரம் வட்டம் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தின் 16 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். முன்னர் இது திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்தது. சென்னை மாவட்டத்தின் பரப்பளவை விரிவாக்கும் போது, இவ்வட்டம் சென்னை மாவட்டத்தின் மேற்கு சென்னை வருவாய் கோட்டத்துடன் இணைக்கப்பட்டது. மாதவரம் வட்டத்தில் 1 உள்வட்டமும், 11 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]
பெருநகர சென்னை மாநகராட்சியை விரிவாக்கம் செய்த போது[2] மாதவரம் உள்வட்டத்தின் மாதவரம் 1, மாதவரம் 2, மாத்தூர், மஞ்சம்பாக்கம், கொசப்பூர், புத்தகரம், செங்குன்றம், கதிர்வேடு மற்றும் சூரப்பட்டு முதலிய 11 வருவாய் கிராமங்களை சென்னை மாநகராட்சியின் மாதவரம் மண்டல எண் 3-இல் இணைக்கப்பட்டது. மாதவரம் மண்டலத்தில் வார்டு எண்கள் 22 – 33 வரை உள்ளது.[3]