துறைமுகம்
Jump to navigation
Jump to search
துறைமுகம் (Harbor) என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம் போன்றவை வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்துவருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாக உள்ளது. இது மிகப் பெரும் சரக்குகள், பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் எடுத்துச் செல்லவும் உதவுகின்றன.
- செயற்கைத் துறைமுகம் - எடுத்துக்காட்டு - சென்னைத் துறைமுகம்
- இயற்கைத் துறைமுகம் - மும்பைத் துறைமுகம்
சங்ககாலத் துறைமுகங்கள்
- நீர்ப்பெயற்று - சங்க காலக் கச்சி அரசன் இளந்திரையனின் நீர்ப்பெயற்று துறைமுகத்தில் கலங்கரை விளக்கம் இருந்தது. [1]
- புகார்
- கொற்கை
- முசிறி
- தொண்டி
- பந்தர்
மேற்கோள்கள்
- ↑
விண் பொர நிவந்த, வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி
உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும்
துறை (பெரும்பாணாற்றுப்படை 351)