சேப்பாக்கம்
சேப்பாக்கம் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°ECoordinates: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | Tamil Nadu தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• நிர்வாகம் | சென்னை மாநகராட்சி |
• ஆளுநர் | [1] |
• முதலமைச்சர் | [2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600005 |
மக்களவைத் தொகுதி | மத்திய சென்னை |
சட்டமன்றத் தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
இணையதளம் | www |
சேப்பாக்கம் (ஆங்கிலம்: Chepauk), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் எம். ஏ. சிதம்பரம் சர்வதேச துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள கலச மஹால், இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.
"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும், "சே பாக்" என்ற உருது வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கத்தின் அஞ்சல் குறியீட்டு எண் 600005 ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள திருவல்லிக்கேணியில், அண்ணா சாலை செல்கிறது.
அமைவிடம்
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் அமைந்துள்ளது.
முக்கிய இடங்கள்
சேப்பாக்கத்தில் உள்ள முக்கிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- சென்னைப் பல்கலைக்கழகம்
- எழிலகம் கட்டிடம்
- சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
- மெரினா கடற்கரை
- அண்ணா சதுக்கம்
- எம். ஜி. ஆர் நினைவிடம்
- ஜெயலலிதா நினைவிடம்
- கலைவாணர் அரங்கம்
போக்குவரத்து
சென்னையில் உள்ள பறக்கும் தொடருந்து நிலையங்களில், சேப்பாக்கம் தொடருந்து நிலையமும் ஒன்றாகும்.
சேப்பாக்கம் வழியாக செல்லும் மாநகரப் பேருந்துகள்:
- பெல்ஸ் சாலை, துடுப்பாட்ட அரங்கம் மற்றும் வாலாஜா சாலை வழியாக: 22A, 6A, 22, 27B, 127B, 27L, 27H, 40, 40A, M28
- வாலாஜா சாலை மற்றும் அண்ணா சதுக்கம்: 11H
- கடற்கரை சாலை (சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம்): 13 series, 45B,45E, PP19, PP21, 21G, G21, H51, PP51, 21H, H21, 6D, 6E, 12G, 25G, 21K, M21K, 21L முதலியன.
அரசியல்
இது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
படங்கள்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies". Tamil Nadu (Election Commission of India) இம் மூலத்தில் இருந்து 2008-10-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081031131000/http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf.