வேளச்சேரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேளச்சேரி
வேளச்சேரி
இருப்பிடம்: வேளச்சேரி

, சென்னை , இந்தியா

அமைவிடம் 12°58′33″N 80°13′14″E / 12.9758°N 80.2205°E / 12.9758; 80.2205Coordinates: 12°58′33″N 80°13′14″E / 12.9758°N 80.2205°E / 12.9758; 80.2205
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகாடே, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி வேளச்சேரி

-

சட்டமன்ற உறுப்பினர்

ஜே. எம். எச். அசன் மவுலானா (இ.தே.கா)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் www.chennai.tn.nic.in

வேளச்சேரி (Velachery), சென்னையில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் ஒரு குடியிருப்புப் பகுதி ஆகும். இதன் முக்கியச் சாலைகள் கிண்டி, அண்ணா சாலை, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்து வரும் தென் சென்னைப் புறநகர்ப் பகுதிகளை இணைக்கின்றன.

சொற்பிறப்பியல்

வேளாளர்கள் ( வேளர்-விவசாயிகள் ) அல்லது வேளிர் [4]( சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்) வாழ்ந்த இடமே வேளச்சேரி என்று அழைக்கப்பட்டது.

வரலாறு - சங்க காலம்

வேளச்சேரி என்னும் இந்த ஊர் ஒன்பதாவது நூற்றாண்டுக்கும் முந்தையது. இவ்வூர் தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்கது என பல்வேறு கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சென்னை செல்லியம்மன் கோயில்இச்சிறப்புமிக்க கல்வெட்டுகள் அமையப்பெற்றுள்ளது. பரகேசரிவர்மன்தென்னிந்திய_கல்வெட்டுகள் / முதலாம் பராந்தக சோழன்முதலாம்_பராந்தக_சோழன் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


போக்குவரத்து[5]

வேளச்சேரியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம்

வேளச்சேரி சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதி கொண்ட ஒரு இடம் ஆகும். வேளச்சேரி விசயநகரப் பேருந்து நிலையத்திலிருத்து பாரிமுனை, திருப்பெரும்புதூர், செங்கற்பட்டு, தியாகராயர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை தவிர்த்து, இங்கு பறக்கும் ரயில் நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

சுற்றுப்புறம்

வேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. டீசியெசு, சதர்லேண்டு, காக்னிசன்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பேரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய லீட் (LEED) சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட ஐ டி சி கிராண்ட் சோழா உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் ஐ ஐ டி மெட்ராசின் மூன்று நுழைவு வாயில்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

இயற்கை வளங்கள்

சென்னையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வேளச்சேரி புறவழிச் சாலையை ஒட்டி அமையப் பெற்ற வேளச்சேரி ஏரி, வேளச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்த ஏரி வேளச்சேரி புறவழிச் சாலையில் ஆரம்பித்து, ஆதம்பாக்கம் வரையிலும் நீண்டு செல்கிறது.

வேளச்சேரியின் குடியிருப்புப் பகுதிகள் மா, தென்னை போன்ற பல வகையான மரங்களைக் கொண்டுள்ளன.


பள்ளிகள்

வேளச்சேரியில் கீழ்க்கண்ட பள்ளிகள் இயங்குகின்றன.

பள்ளி வகை பள்ளிகள் பயிற்று மொழி சிறப்புக் குறிப்பு
அரசுப் பள்ளிகள் மாநகராட்சி குழந்தைகள் பள்ளி தமிழ் பஜனை கோயில் தெரு
அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ் திரெளபதி அம்மன் கோயில் தெரு
அட்வென்ட் கிருஸ்துவ நடு   நிலை பள்ளி (மிக பழமையானது ) தமிழ்  

ஆங்கிலம்

காந்தி சாலை
தமிழ்நாடு சமச்சீர் பாடத் திட்டம் ஸ்ரீ அ.கணேசன் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் விஜய நகரம்
பெத்தல் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் விஜயநகரம்
அக்‌ஷயா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் டான்ஸி நகர் (இதே வளாகத்தில் சர்வதேச பள்ளியும் உள்ளது)
சிவசக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் புறவழிச் சாலை, ஏரிக்கரை அருகில்
குருநானக் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் குருநானக் கல்லூரி அருகில்
செயின்ட் ஃப்ரான்சிஸ் ஸேவியர் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் தண்டீஸ்வரம்
செயின்ட் ஸேவியோ மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் தண்டீஸ்வரம் சீதாபதி நகர்
டேவிட் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆங்கிலம் காந்தி சாலை
மத்திய பாடத் திட்டம் டி.ஏ.வி. பப்ளிக் ஸ்கூல் பள்ளி ஆங்கிலம் விஜய நகர்
சன் ஷைன் சீனியர் செகண்டரி பள்ளி ஆங்கிலம் உள்வட்டச் சாலை, புழுதிவாக்கம்
செயின்ட் பிரிட்டோஸ் அகாடமி பள்ளி ஆங்கிலம் நேதாஜி சாலை
டி.ஏ.வி. ஆதம்பாக்கம் பள்ளி ஆங்கிலம் ஆதம்பாக்கம்
மான்ட்டஸரி அல்லது சர்வதேச பாடத் திட்டம் நவதிஷா மான்ட்டஸரி பள்ளி ஆங்கிலம் உள்வட்டச் சாலை, கல்கி நகர்
அக்‌ஷயா குளோபல் பள்ளி ஆங்கிலம் டான்ஸி நகர்
குழந்தைப் பள்ளிகள் சன் ஷைன் மான்ட்டஸரி பள்ளி ஆங்கிலம் பேபி நகர் (யு.கே.ஜி வரை மட்டும்)
மேப்பிள் பேர் கனடா பள்ளி ஆங்கிலம் டான்ஸி நகர் (யு.கே.ஜி வரை மட்டும்)
யூரோ கிட்ஸ் பள்ளி ஆங்கிலம் ராஜலக்ஷ்மி நகர் (யு.கே.ஜி வரை மட்டும்)
இன்டர்நேஷனல் மான்ட்டஸரி & ப்ளே ஸ்கூல் பள்ளி ஆங்கிலம் புறவழிச் சாலை (யு.கே.ஜி வரை மட்டும்)
மார்க் வித்யாலயா ஆங்கிலம் விஜிபி

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "வேளிர் (தமிழகம்)", தமிழ் விக்கிப்பீடியா, 2016-08-30, பார்க்கப்பட்ட நாள் 2018-03-05
  5. "வேளச்சேரி இரயில் நிலையம்", தமிழ் விக்கிப்பீடியா, 2015-12-19, பார்க்கப்பட்ட நாள் 2018-03-05

வெளி இணைப்புகள்

Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/index.php?title=வேளச்சேரி&oldid=40778" இருந்து மீள்விக்கப்பட்டது