பல்லாவரம்
| பல்லாவரம் | |
| — சென்னையின் புறநகர்ப் பகுதி — | |
| ஆள்கூறு | 12°58′03″N 80°08′57″E / 12.9675°N 80.1491°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | செங்கல்பட்டு |
| வட்டம் | பல்லாவரம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | மாலதி கெலன், இ. ஆ. ப |
| நகராட்சி தலைவர் | |
| சட்டமன்றத் தொகுதி | பல்லாவரம்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 2,15,417 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 50 மீட்டர்கள் (160 அடி) |
பல்லாவரம் (ஆங்கிலம்: Pallavaram) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் சென்னையின் புறநகர் பகுதியும் ஆகும். இவ்வூரில் மின்சார தொடருந்து நிலையம் உள்ளது.[3] பல்லாவரம் திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]
அமைவிடம்
பல்லாவரம் காஞ்சிபுரத்திலிருந்து 65 கி.மீ. தொலைவிலும், எழும்பூரிலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
வரலாறு
பல்லவர்புரம் என்ற பெயர் பின்னர் பல்லாவரம் என்று மாறியது.[5] பல்லாவரம் நகரம் முந்தைய செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°59′N 80°11′E / 12.98°N 80.18°E ஆகும்.[6] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. அரசு ஆவணங்களில் பல்லவபுரம் என்றே குறிப்பிடப்படும்.
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 56,135 குடும்பங்களையும் கொண்ட இப்பகுதியின் மக்கள்தொகை 2.15,417 ஆகும். இப்பகுதியின் எழுத்தறிவு 92.9% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 22258 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 978 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 34,199 மற்றும் 1,031 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 91.51%, இசுலாமியர்கள் 6.92% , கிறித்தவர்கள் 9.12% , தமிழ்ச் சமணர்கள் 0.15%, மற்றும் பிறர் 0.93% ஆகவுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியுடன் இணைத்தல்
3 நவம்பர் 2021 அன்று பல்லாவரம் பகுதி தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ பல்லாவரம் மின்சார தொடருந்து நிலையம்
- ↑ "ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225432-sriperumbudur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு. சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். pp. 19.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ "Pallavaram". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
வெளி இணைப்புகள்
