காளிகாம்பாள் கோவில்
காளிகாம்பாள் கோவில் | |
---|---|
காளிகாம்பாள் கோயில் நுழைவாயில் கோபுரம் | |
சென்னை தம்புச்செட்டித் தெருவில் காளிகாம்பாள் கோவிலின் அமைவிடம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | சென்னை |
அமைவு: | தம்புச்செட்டித் தெரு, பழைய ஜார்ஜ் டவுன், பாரிமுனை, சென்னை, தமிழ்நாடு |
ஆள்கூறுகள்: | 13°05′40″N 80°17′21″E / 13.09455°N 80.2891°ECoordinates: 13°05′40″N 80°17′21″E / 13.09455°N 80.2891°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோயில் கட்டிடக்கலை |
காளிகாம்பாள் கோவில் (Kālikāmbal Temple) இந்தியாவின் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் உள்ள பழைய ஜார்ஜ் டவுனில், பாரிமுனை பகுதியில் உள்ள தம்புச்செட்டித் தெருவில் அமைந்துள்ளது. இக்காளி கோவில் விஸ்வகர்மா சமூகத்தின் முத்துமாரி ஆச்சாரி தலைமையில் 1640-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1]
காளிகாம்பாள் வடிவம்
காளி அம்மன் எப்போதும் கையில் தமருகம், சூலம், கட்கம், கபாலம், கேடகம் முதலிய ஆயுதங்கள் கொண்டு கோப ரூபத்துடன் காட்சியளிப்பவள். ஆனால் இக்கோயிலில் குடிகொண்டுள்ள அன்னை காளிகாம்பாள வடிவம் எழில் கொஞ்சும் திருமேனியுடன், ஆணவத்தை அடக்கும் அங்குசம். ஜென்ம பாப வலைதனில் இருந்து மீட்கும் பாசம், சுகபோகத்தினை நல்கும் நீலோத்பல மலர் மற்றும் வரத முத்திரை, சோமன், சூரியன், அக்னி என்ற மூன்று கண்கள், நவரத்ன மணிமகுடம், வலது காலைத் தொங்க விட்டுக் கொண்டு அமர்ந்த கோலத்துடன் காணப்படுகிறாள்.
வரலாறு
காளி அம்மனுக்கு அர்பணிக்கப்பட்ட இக்கோயில் முன்னர் சென்னை கடற்கரை பகுதியில் இருந்தது. பொ.ஊ. 1640-ஆம் ஆண்டில் இக்கோயிலை கடற்கரைப் பகுதியிலிருந்து தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டு சீரமைக்கும் பணி துவக்கப்பட்டது. 1678-ஆம் ஆண்டில் காளிகாம்பாள் கோயில் சீரமைப்பு முடிந்தது.[2]
இக்கோயிலுக்கு 1980-ஆம் ஆண்டில் 10 மீட்டர் உயரம் கொண்ட புதிய இராஜகோபுரம் நிறுவப்பட்டது.[3] இக்கோவிலுக்கு 2014-ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு புதிய இராஜகோபுரம் நிறுவப்பட்டது.
சிறப்பு
- 3 அக்டோபர் 1677 அன்று மராத்தியப் பேரரசர் சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்து அம்மனை தர்சனம் செய்ததாக, இக்கோவில் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.[3][4]
- முதலில் ஜார்ஜ் டவுன் பகுதியில் தங்கியிருந்த பாரதியார் இக்கோவில் அம்மன் காளிகாம்பாளை தர்சனம் செய்த பிறகு பாடிய ‘‘யாதுமாகி நின்றாய் காளி’’ என்ற பாடலில் வருவது காளிகாம்பாள்தான்.[3]
மேற்கோள்கள்
- ↑ An ancient temple in a commercial hub
- ↑ "1639 A.D. TO 1700 A.D." History of Chennai. ChennaiBest.com. Archived from the original on 2012-10-09. பார்க்கப்பட்ட நாள் 20 Jan 2013.
- ↑ 3.0 3.1 3.2 Muthiah, S. (2014). Madras Rediscovered. Chennai: EastWest. p. 384. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-84030-28-5.
- ↑ "Chennai High: Where history beckons". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Chennai). 27 August 2010 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130216064735/http://articles.timesofindia.indiatimes.com/2010-08-27/chennai/28292743_1_pillars-fort-st-george-madras/2.