தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(தியாகராயநகர் ஸ்ரீ பாலாஜி கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்
@ வெங்கடேசுவர சுவாமி கோயில், தி. நகர், சென்னை, தமிழ்நாடு
தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில் is located in சென்னை
தியாகராயநகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில்
வெங்கடேசுவர சுவாமி கோயில், தி. நகர், சென்னை, தமிழ்நாடு
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை
அமைவு:வெங்கடநாராயணா சாலை, தியாகராய நகர்
ஏற்றம்:31.74 m (104 அடி)
ஆள்கூறுகள்:13°02′09″N 80°14′11″E / 13.0357°N 80.2364°E / 13.0357; 80.2364Coordinates: 13°02′09″N 80°14′11″E / 13.0357°N 80.2364°E / 13.0357; 80.2364
கோயில் தகவல்கள்

தியாகராய நகர் ஸ்ரீ வெங்கடேசுவர சுவாமி கோயில் (English: Sri Venkateswara Swamy Temple, T. Nagar) என்பது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள தியாகராய நகர் பகுதியின் வெங்கடநாராயணா சாலையில் அமைந்த வைணவப் பெருமாள் கோயில் ஆகும்.[1][2] இக்கோயிலில் அலர்மேல் மங்கை தாயார் உடனுறை வெங்கடாஜலபதி காட்சி தருகிறார். மேலும் இக்கோயிலில் ஹயக்கிரீவர், வராகர், இராமர், கிருஷ்ணர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், அரங்கநாதர், இலக்குமி, ஸ்ரீ தேவி, பூதேவி, பிரம்மா மற்றும் இராமானுஜருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகத்தினர் இக்கோயிலைக் கட்டி, பராமரிக்கின்றனர்.[3] மேலும் இக்கோயிலில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்பவர்களுக்கான முன்பதிவு சீட்டுகள் வழங்கப்படுவதுடன், திருப்பதி லட்டு பிரசாதமும் விற்பனை செய்யப்படுகிறது.[4]

மேற்கோள்கள்

  1. "TTD to complete Thyagaraya Nagar temple expansion works by 2028 by spending Rs 150 crore". The Times of India. 28 சூன் 2024. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2024.
  2. "திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தி.நகர் வெங்கடேஸ்வர பெருமாள் கோயில் விரிவாக்கம்". Hindu Tamil Thisai. 13 ஏப்பிரல் 2024. பார்க்கப்பட்ட நாள் 9 நவம்பர் 2024. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. Sri Balaji Temple by Tirumala Tirupati Devasthanam
  4. TTD T.Nagar Temple Timings