குன்றத்தூர்
குன்றத்தூர் | |
அமைவிடம் | 12°59′52″N 80°05′50″E / 12.997700°N 80.097200°ECoordinates: 12°59′52″N 80°05′50″E / 12.997700°N 80.097200°E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | காஞ்சிபுரம் |
வட்டம் | குன்றத்தூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
54,986 (2011[update]) • 6,110/km2 (15,825/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
9 சதுர கிலோமீட்டர்கள் (3.5 sq mi) • 48 மீட்டர்கள் (157 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/kunrathur |
குன்றத்தூர் (ஆங்கிலம்:Kundrathur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். இது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 12 செப்டம்பர் 2021 அன்று இப்பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4]
குன்றத்தூர் வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்தின், வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது. இது சென்னை பெருநகர் பகுதியின் ஒரு அங்கம் ஆகும்.
குன்றத்தூர் நகராட்சி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும எல்லைக்குட்பட்ட வளர்ந்து வரும் பகுதியாகும். பெரியபுராணம் எனும் நூலை இயற்றிய சேக்கிழார் பிறந்த ஊராகும். இவ்வூரின் குன்றில் அமைந்துள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள திருநாகேஸ்வர திருக்கோயில், சென்னையை சுற்றியுள்ள நவக்கிரகத் தலங்களுள் ஒன்றாகும். குன்றத்தூரை ஒட்டி சென்னை மாநகர வெளிவட்ட சிறப்பு புறவழிச் சாலையான வண்டலூர் - மீஞ்சூர் சாலை அமைந்துள்ளது.