விருத்தாச்சலம்
விருத்தாச்சலம் | |||||||
— முதல் நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம் | 11°31′01″N 79°19′13″E / 11.51695°N 79.320205°ECoordinates: 11°31′01″N 79°19′13″E / 11.51695°N 79.320205°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
பகுதி | தொண்டை நாடு | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கடலூர் | ||||||
வட்டம் | விருத்தாசலம் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | சிபி ஆதித்யா செந்தில் குமார், இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி் தலைவர் | டாக்டர். சங்கவி முருகதாஸ் | ||||||
சட்டமன்றத் தொகுதி | விருத்தாச்சலம் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் (இ.தே.கா) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
73,415 (2011[update]) • 2,871/km2 (7,436/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 25.57 சதுர கிலோமீட்டர்கள் (9.87 sq mi) | ||||||
குறியீடுகள்
|
விருத்தாச்சலம் (ஆங்கிலம்:Vriddhachalam அல்லது Virudhachalam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் வட்டம் மற்றும் விருத்தாச்சலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இது கடலூர் மாவட்ட அதிக மக்கள் அடர்த்தி கொண்ட நகராட்சி ஆகும்.
போக்குவரத்து
கடலூர், விழுப்புரம், திருக்கோவிலூர் , சென்னை, ஜெயங்கொண்டம் அரியலூர், திருவண்ணாமலை, சிதம்பரம், சேலம், ஆத்தூர், ஈரோடு, திருப்பூர், கும்பகோணம், புதுச்சேரி, திருச்சி,வடலூர், நெய்வேலி, பண்ருட்டி,திருப்பதி,ஊட்டி,கேரளம்(puducherry transport)குறிஞ்சிப்பாடி என அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி உள்ளது
24 மணி நேரமும் போக்குவரத்து வசதி உள்ளது
தொடர்வண்டி போக்குவரத்து
[விருத்தாச்சலம் சந்திப்பு தொடருந்து நிலையம்|விருத்தாச்சலம் தொடருந்து நிலையமானது]] மிகப்பெரிய தொடருந்து நிலையமாகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையமாகும். இது தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையையும், தென்தமிழகத்தினையும் இணைக்கும் மிகமுக்கியமான இணைப்பு நிலையமாகத் திகழ்கிறது. இது தென்னக இரயில்வேயின் முக்கியமான தொடருந்து நிலையங்களுள் ஒன்றாகும்.
- விருதாச்சலம் - திருச்சி, (வழி: அரியலூர்) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட இரட்டை அகலப் பாதை. இது கார்டு லைன் என்றும் அழைக்கப்படுகிறது.
- விருதாச்சலம் - சேலம் (வழி: ஆத்தூர் (சேலம்)) முழுமையாக மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
- விருதாச்சலம் - கடலூர் மின்மயமாக்கப்பட்ட அகலப் பாதை.
அருகில் உள்ள விமான நிலையம்
திருச்சிராப்பள்ளி 135 கி.மீ.
சென்னை 220 கி.மீ.
பெயர்க்காரணம்
"திருமுதுகுன்றம்" எனவும் "பழமலை" எனவும் வழங்கப்பட்டு வந்த ஊர், பின்னாளில் வடமொழி பெயராக விருத்தாசலம் என மாற்றப்பட்டது. "விருத்தம்"(=முதிர்ந்த) மற்றும் "அசலம்"(=மலை) எனும் இரு வடமொழி சொற்களின் கூட்டே "விருத்தாசலம்" ஆகும். விருத்தாச்சலம் நகரம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. விருத்தாச்சலம் நகரம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். விருத்தாச்சலம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. விருத்தாச்சலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
புவியியல்
இந்நகரம் 11°30′N 79°20′E / 11.50°N 79.33°E[5] -ல் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 45 மீட்டர் உயரத்தில் உள்ளது.
பள்ளிக்கூடங்கள்
- அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி
- ஃபாத்திமா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி
- பேபி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- சரசுவதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
- டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி
- கலைவாணி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி
- சாரதா வித்யாலயா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி
- வி.இ.டி. மேல்நிலைப்பள்ளி
- ஆற்காடு லூத்ரன் சபை பள்ளி
- இன்ஃபேன்ட் மேல் நிலைப் பள்ளி
- ஜெயப்பிரியா வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி (சி.பி.எஸ்.இ.)
பார்க்க வேண்டிய இடங்கள்
- பழமலை நாதர் (விருத்தகிரீசுவரர்) ஆலயம் (பெரியகோயில் என அழைக்கப்படுகிறது)
- கொளஞ்சியப்பர் முருகன் கோயில்
- ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக பெருமாள் ஆலயம்
- பீங்கான் தொழிற்சாலை
- முந்திரிப்பண்ணை
- திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி
- நவாப் பள்ளி வாசல்
- மணி முத்தா நதி
மத சம்பந்தமான விழாக்கள்
- விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசிமகம்
- விருத்தகிரிஸ்வரர் கோயில் மாசி மாத தேர்திருவிழா
- புரட்டாசி மாத கருடசேவை
- பங்குனி உத்திரம்
அரசியல்
விருத்தாசலம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். மக்களவைத் தொகுதிகளில் கடலூர் தொகுதியின் கீழ் வருகிறது. 2006ல் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் இங்கு வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றார். அந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தேமுதிக சார்பாக விஜயகாந்த் மட்டுமே வெற்றிபெற்றார். தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். ஆர். ஆர். ராதாகிருஷ்ணன் (இ.தே.கா) , இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.
திரையரங்குகள்
- சந்தோஷ்குமார் பேலஸ்
- பி. வி. ஜி. பேலஸ்
- ஜெய் சாய் கிருஷ்ணா பேலஸ்
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. 2015. http://www.tn.gov.in/ta/government/keycontact/197. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/government/keycontact/18358. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. http://www.tn.gov.in/ta/collectors. பார்த்த நாள்: நவம்பர் 3, 2015.
- ↑ "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை" இம் மூலத்தில் இருந்து 2014-03-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140318133922/http://municipality.tn.gov.in/virudhachalam/Population2011.pdf. பார்த்த நாள்: செப்டம்பர் 30, 2013.
- ↑ Falling Rain Genomics, Inc - Vriddhachalam