தூத்துக்குடி வட்டம்
Jump to navigation
Jump to search
தூத்துக்குடி வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தூத்துக்குடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழத்தட்டாப்பாறை, முடிவைத்தானேந்தல், புதுக்கோட்டை மற்றும் தூத்துக்குடி என 4 உள்வட்டங்களும் 33 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]மேலும் இவ்வட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]
- மக்கள்தொகை = 478,328
- ஆண்கள் = 239,342
- பெண்கள் = 238,986
- குடும்பங்கள் = 122,574
- கிராமப்புற மக்கள்தொகை % = 13.9%
- எழுத்தறிவு = 90.96%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 53393
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 966 பெண் குழந்தைகள்
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 70,573 மற்றும் 999
சமயம்
- இந்துக்கள் = 71.7%
- இசுலாமியர்கள் = 3.44%
- கிறித்தவர்கள் = 24.63%
- பிறர்= 0.06%
பொருளாதாரம்
இவ்வட்டடத்தின் கடலோரப் பகுதிகளில் கடல்நீரிலிருந்து உப்பளங்கள் மூலம் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வட்டத்தில் ஸ்பிக் உரநிறுவனம், அனல் மின்நிலையம், தூத்துக்குடி துறைமுகம், மீன்பிடி துறைமுகம் மற்றும் செப்புக்கம்பி தாயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ தூத்துக்குடி மாவட்ட வட்டங்கள்
- ↑ வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- ↑ [https://www.censusindia.co.in/subdistrict/thoothukkudi-taluka-tamil-nadu-5866 Thoothukkudi Taluka Population, Caste, Religion Census Data 2011]