நவதிருப்பதி
நவதிருப்பதி என்பது இந்தியாவில், தமிழ்நாட்டில், தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்துள்ள 9 முக்கிய இந்து வைணவ தலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புப் பெயராகும். இந்த ஒன்பது தலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்துக்கு உரியவையாக விளங்குகின்றன. இவை திவ்ய தேசங்களாகவும் உள்ளன.
நவக்கிரங்கள்
நவக்கிரகங்கள் பொதுவாக இந்து சைவ வழிபாட்டுத்தலங்களில் முக்கிய பங்கு வகிப்பன. நவதிருப்பதி என அழைக்கப்படும் ஒன்பது வைணவ தலங்களும், நவக்கிரகங்களுடன் தொடர்புடையவையாகக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவக்கிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது.[1][2]
சோழநாட்டில் அமைந்துள்ள நவக்கிரகங்களுக்கு ஒப்பாக இப்பாண்டி நாட்டு நவதிருப்பதிகள் நவக்கிரகங்களாகப் போற்றப்படுகின்றன. இங்கு பெருமாளே நவக்கிரகங்களாகச் செயல்படுவதால் நவக்கிரகங்களுக்கு என தனியே சந்நிதி அமைக்கப்படுவதில்லை. அவரவர்க்கு உள்ள கிரக தோஷங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் நீங்கும் என்பது தொன்நம்பிக்கை.
நவதிருப்பதி கோவில்கள்
நவதிருப்பதி கோயில்களின் பட்டியல்:[3][4]
கோயில் பெயர் | இறைவன் | கோள் | சிறப்பு நாள் | படிமம் | அமைவிடம் | நடை திறப்பு காலம் |
---|---|---|---|---|---|---|
வைகுண்டநாதர் கோவில், ஸ்ரீவைகுண்டம் | வைகுந்தநாதன் | சூரியன் | ஞாயிற்றுக்கிழமை | திருவைகுண்டம் | காலை 7 - 12 , மாலை 5 - 8 | |
விஜயாசனப் பெருமாள் கோயில் | விஜயாசனப் பெருமாள் | சந்திரன் | திங்கட்கிழமை | நத்தம் | காலை 8 - 12 ; மாலை 1 - 6 | |
வைத்தமாநிதி பெருமாள் கோயில் | வைத்தமாநிதிபெருமாள் | செவ்வாய் | செவ்வாய் கிழமை | திருக்கோளூர் | காலை 7:30 - 12 ; மாலை 1 - 8 | |
திருப்புளியங்குடி பெருமாள் கோயில் | பூமிபாலகர் | புதன் | புதன்கிழமை | திருப்புளியங்குடி | காலை 8 - 12; மாலை 1 - 6 | |
ஆழ்வார்திருநகரி ஆதிநாதன் கோயில் | ஆதிநாதன் | வியாழன் | வியாழக்கிழமை | ஆழ்வார்திருநகரி | காலை 6 - 12; மாலை 5 - 8:45 | |
திருப்பேரை | மகர நெடுங்குழைக்காதன் | வெள்ளி | வெள்ளிக்கிழமை | தென்திருப்பேரை | காலை 7 - 12 ; மாலை 5 - 8:30 pm | |
பெருங்குளம் பெருமாள் கோவில் | சோர நாதன்(மாயக்கூத்தன்) | சனி | சனிக்கிழமை | பெருங்குளம் | காலை 7:30 - 12:30; மாலை 4:30 - 7:30 | |
இரட்டைத் திருப்பதி தேவப்பிரான் கோயில் | தேவப்பிரான் | இராகு | தொலைவில்லிமங்கலம் | காலை 8 - 1; மாலை 2 - 6 | ||
இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசனர் திருக்கோயில் |
அரவிந்த லோசனர் | கேது | தொலைவில்லிமங்கலம் | காலை 8 - 1; மாலை 2 - 6 |
நவதிருப்பதி கோயில்கள் செல்லும் வழி
இத்திருத்தலங்களைத் தரிசிக்க திருநெல்வேலி அல்லது திருச்செந்தூரில் தங்கி பயணிக்கலாம். வாடகை வாகனங்கள்/சொந்த வாகனம் மூலம் காலை 06.00 மணிக்கு தரிசன பயணத்தினை தொடங்கி மாலை 6.00 மணிக்குள் நிறைவு செய்யலாம்.
மேற்கோள்கள்
- ↑ http://www.dinamani.com/edition/print.aspx?artid=533824 தினமணி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-04-13.
- ↑ M., Rajagopalan (1993). 15 Vaishnava Temples of Tamil Nadu. Chennai, India: Govindaswamy Printers. pp. 155–159.
- ↑ "Navatirupathi". The Hindu. 25 October 2002 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630055238/http://www.hindu.com/thehindu/fr/2002/10/25/stories/2002102501050700.htm. பார்த்த நாள்: 25 October 2015.
வெளி இணைப்புகள்
- நவதிருப்பதி கோயில்கள் செல்லும் மார்க்கம்
- நவதிருப்பதி கோவில்கள்
- தினமலர்[தொடர்பிழந்த இணைப்பு]
- தினமலர்
- நவதிருப்பதி திருத்தலங்கள்
- கள்ளபிரான் சுவாமி திருக்கோயில்
- விஜயாசன பெருமாள் திருக்கோயில் (வரகுணமங்கை)
- திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில்
- திருப்புளியங்குடி காய்சினவேந்தப் பெருமாள் திருக்கோயில்
- ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில்
- தென்திருப்பேரை மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில்
- திருக்குளந்தை வேங்கடவானன் திருக்கோயில்
- திருத்தொலைவில்லிமங்கலம் தேவர்பிரான் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)
- திருத்தொலைவில்லிமங்கலம் அரவிந்த லோசனர் திருக்கோயில் (இரட்டை திருப்பதி)