திருப்பேரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில்
படிமம்:Then Thirupperai3.jpg
புவியியல் ஆள்கூற்று:8°36′12″N 77°59′10″E / 8.603233°N 77.986020°E / 8.603233; 77.986020
பெயர்
புராண பெயர்(கள்):தென்திருப்பேரை
பெயர்:தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதன் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தென்திருப்பேரை
மாவட்டம்:தூத்துக்குடி
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மகர நெடுங்குழைக்காதன் (வீற்றிருந்த திருக்கோலம்)
உற்சவர்:நிகரில் முகில் வண்ணன்
தாயார்:குழைக்காத நாச்சியார், திருப்பேரை நாச்சியார் (இரு தனித்தனி சன்னதி)
தீர்த்தம்:சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம், கூடுபுனல் (தாமிரபரணி) தீர்த்தம்
மங்களாசாசனம்
பாடல் வகை:நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:நம்மாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:பத்ர விமானம்
கல்வெட்டுகள்:உண்டு

திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் பூமிதேவி இங்கு தவம் செய்ததால் திருப்பேரை என்றே இத்தலத்திற்குப் பெயருண்டாயிற்று. 108 வைணவ திவ்ய தேசங்களில் சோழநாட்டில் திருச்சிக்கு அண்மையில் திருப்பேர் நகர் என்ற திருத்தலம் ஒன்றிருப்பதால் இத்தலத்தை தென்திருப்பேரை என்று அழைத்தனர்.[1] இறைவன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். இறைவன் பெயர்கள்: மகர நெடுங்குழைக்காதன். நிகரில் முகில் வண்ணன். இறைவி பெயர்கள்: குழைக்காதுவல்லி, திருப்பேரை நாச்சியார்; தீர்த்தம் : சுக்ர புஷ்கரணி, சங்க தீர்த்தம், மகர தீர்த்தம் ஆகியன. விமானம்: பத்ர விமானம் என்ற வகையைச் சேர்ந்தது. ஆழ்வார்களில் நம்மாழ்வாரால் மட்டும் 11 பாசுரங்களால் பாடல் பெற்றது. மணவாள மாமுனிகளும் இத்தலத்தைப் பாடியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.{{cite book}}: CS1 maint: extra punctuation (link)
"https://tamilar.wiki/index.php?title=திருப்பேரை&oldid=131471" இருந்து மீள்விக்கப்பட்டது