ஸ்ரீவைகுண்டம் வட்டம்
Jump to navigation
Jump to search
சிரீவைகுண்டம் வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிரீவைகுண்டம் நகரம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் வல்லநாடு, தெய்வச்செயல்புரம், செய்துங்கநல்லூர், ஆறுமுகங்குளம், சிரீவைகுண்டம் என ஆறு உள்வட்டங்களும், சேரகுளம், காரசேரி, அரசர்குளம், வள்ளுவர் காலனி, தாதன்குளம், கருங்குளம், ஆதிச்சநல்லூர், கால்வாய், வெள்ளூர் உட்பட 69 வருவாய் கிராமங்களும் உள்ளன.[2]
இவ்வட்டத்தில் திருவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. மேலும் நவகைலாய கோயில்கள் மற்றும் ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் உள்ளது.