கோவில்பட்டி வட்டம்
Jump to navigation
Jump to search
கோவில்பட்டி வட்டம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக கோவில்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் கோவில்பட்டி, கழுகுமலை மற்றும் இளையரசனேந்தல் என 3 உள்வட்டங்களும் 87 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]
கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வருவாய் வட்டங்களின் 76 வருவாய் கிராமங்களைக் கொண்டு 2016ல் புதிய கயத்தாறு வட்டம் நிறுவப்பட்டது.[3] இவ்வட்டத்தில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பின்வருமாறு உள்ளது. [4]
- மக்கள்தொகை 321,323.
- ஆண்கள் = 157,825.
- பெண்கள் = 163,498.
- குடும்பங்கள் = 89,004.
- கிராமப்புற மக்கள்தொகை = 40.6%.
- எழுத்தறிவு = 81.5%.
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,036 பெண்கள்.
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 30,980.
- குழந்தைகள் பாலின விகிதம் = 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = முறையே 69,245 மற்றும் 1,350.
சமயம்
- இந்துக்கள் = 91.23%
- இசுலாமியர்கள் = 1.96%
- கிறித்தவர்கள் = 6.48%
- பிறர்= 0.33%
சாகித்திய அகாதமி விருது பெற்ற கோவில்பட்டி வட்டத்தவர்கள்
- கு. அழகிரிசாமி - (ஆண்டு) 1970
- கி. ராஜநாராயணன் - (ஆண்டு) 1991
- பூமணி - (ஆண்டு) 2014
- சோ. தர்மன் - (ஆண்டு) 2019