முதுகுளத்தூர் வட்டம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முதுகுளத்தூர் வட்டம் , தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக முதுகுளத்தூர் உள்ளது. இவ்வட்டத்தில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

இந்த வட்டத்தின் கீழ் முதுகுளத்தூர் வடக்கு, முதுகுளத்தூர் தெற்கு, கீழத்தூவல், மேலக்கொடுமளூர், காக்கூர் மற்றும் தேருருவேலி என 6 உள்வட்டங்களும், 46 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 1,13,432 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 56,531 ஆண்களும், 56,901 பெண்களும் உள்ளனர். 28,974 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 72.3%. மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 74.08% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 11253 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 980 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 32,557 மற்றும் 5 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.19%, இசுலாமியர்கள் 5.4%, கிறித்தவர்கள் 6.27% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

  1. இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்
  2. முதுகுளத்தூர் வட்டத்தின் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்
  3. "முதுகுளத்தூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்". Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
"https://tamilar.wiki/index.php?title=முதுகுளத்தூர்_வட்டம்&oldid=128421" இருந்து மீள்விக்கப்பட்டது