குன்னூர் வட்டம்
Jump to navigation
Jump to search
குன்னூர் வட்டம் , தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும்.[1]
இந்த வட்டத்தின் தலைமையகமாக குன்னூர் நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 15 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டத்தில் குன்னூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
மக்கள் தொகை பரவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 1,57,744 ஆகவுள்ளது.. தாழ்த்தப்பட்டோர் 53,803 ஆகவும், பட்டியல் பழங்குடியினர் 2,354 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 88.27% ஆகவுள்ளது. பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர்.[2]
குன்னூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்
- குன்னூர் நகர்புறம்
- குன்னூர் கிராமப்புறம்
- பர்லியார்
- எடப்பள்ளி
- கேத்தி I
- கேத்தி II
- கேத்தி III
- அதிகரட்டி I
- அதிகரட்டி II
- மேலூர் I
- மேலூர் II
- மேலூர் III
- ஹுலிக்கல் I
- ஹுலிக்கல் II
- அப்பதலை