அரக்கோணம் வட்டம்
அரக்கோணம் வட்டம் என்பது தமிழ்நாட்டில் 28 நவம்பர் 2019 அன்று நிறுவப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டத்தின் 4 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அரக்கோணம் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் அரக்கோணம் (தெற்கு), அரக்கோணம் (வடக்கு), பள்ளூர் மற்றும் பாராஞ்சி எனும் 4 உள்வட்டங்களும், 68 வருவாய் கிராமங்களும் உள்ளன.[1]அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 504,026 ஆகும். அதில் 251,905 ஆண்களும், 252,121 பெண்களும் உள்ளனர். 122,251 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 69.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 77.96% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,001 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 54,498 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 144,469 மற்றும் 7,680 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.28%, இசுலாமியர்கள் 3.29% , கிறித்தவர்கள் 3.14% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர்.[2]