இந்தியாவின் அலுவல் மொழிகள்
| |
இந்திய அரசியலமைப்பு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் | |
---|---|
பற்றிய தொடரின் ஒரு பகுதி | |
பகுப்பு | |
இந்திய குடியரசின் 22 அதிகாரப்பூர்வ மொழிகள் | |
தொடர்புடையவை | |
|
இந்தியாவின் அலுவல்மொழிகள் (official languages of the Indian Union) அலுவல் பணிகளுக்கு முதன்மையாக இந்தியும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன.[2] இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம்.[2] இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை.[3]
மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. ஆகையால் அலுவல்மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்பு மிக விவரமான அங்கங்களை கொண்டுள்ளது.[4] ஒன்றியத்தின் அலுவல்பணிகளுக்கான மொழியை மட்டுமன்றி [5] ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஆட்சிப்பகுதியிலும் பயன்படுத்தப்படும் அலுவல்மொழி,[6] மற்றும் ஒன்றியமும் மாநிலங்களும் அவற்றினிடையேயும் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுக்கான மொழி குறித்தும் [7] வரையறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் நடுவண் மற்றும் மாநில அளவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது.[8] 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமையும் என எதிர்பார்த்தது;இருப்பினும் இந்திய நாடாளுமன்றத்திற்கு இதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியிருந்தது.[9] ஆனால் இந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல்மொழியாகத் தொடர்கிறது. ஆங்கிலம் இந்தி மொழியுடன் ஒன்றியப் பணிகளிலும் சில மாநிலப் பணிகளிலும் பிற மொழிகளுடன் மாநிலப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
தற்போதுள்ள அலுவல்மொழிகள் குறித்த சட்ட ஆவணங்கள், இந்திய அரசியலமைப்பு, அலுவல் மொழிகள் சட்டம்,1963, அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கானது) விதிகள்,1976 மற்றும் மாநில மற்றும் நடுவண் அரசின் விதிகளும் கட்டுப்பாடுகளும் ஆகும்.
ஒன்றியத்தின் அலுவல்மொழிகள் - வரலாறு
சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபையில் இந்தியாவின் தேசிய மொழி என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து நீண்ட நெடிய விவாதங்கள் நடைபெற்றன. இந்தியா அல்லது உருது கலந்த இந்துஸ்தானியா என்ற விவாதம் நடைபெற்ற நிலையில் இந்த சபையில் இடம் பெற்றிருந்த தென்னிந்தியாவைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், ஜி.துர்காபாய், ராமலிங்க செட்டியார், என்.ஜி.ரங்கா, என். கோபாலசாமி ஐயங்கார், எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆகியோர் ஆங்கிலமே அரசு மொழியாக நீடிக்க வேண்டும் என்றனர்.மூன்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு 1949ஆம் ஆண்டு முன்சி - கோபால்சாமி ஐயங்கார் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்பின் 17ஆவது பிரிவின் அடிப்படையில் தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி இந்தியாவின் அலுவல் மொழியாக ஏற்கப்பட்டது. இதில் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று எந்த இடத்திலும் இல்லை. அலுவல் மொழி குறித்து மட்டுமே இந்தப் பிரிவு பேசுகிறது.[10]
இந்திய அரசியலமைப்பு, 1950இல் , தேவநாகரி எழுத்துருவில் அமைந்த இந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது.[11] நாடாளுமன்றம் மாறாக தீர்மானிக்காதவிடத்து, அரசியலமைப்பு செயலாக்கத்திற்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு,சனவரி 26, 1965, அரசுப்பணிகளுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.[12] இத்தகைய மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு இந்தி பேசாத பகுதிகளில், முக்கியமாக இந்தியுடன் எத்தகைய ஒற்றுமையும் இல்லாத மொழிகள் பேசும் திராவிட மாநிலங்களில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியப் பாராளுமன்றம் 1963 அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது[13][14][15][16][17][18]; இதன்படி 1965ஆம் ஆண்டிற்கு பின்னரும் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்தது.
1964ஆம் ஆண்டு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இவற்றில் சில வன்முறையாக மாறின.[19] இதன் விளைவாக, கொண்டுவரவிருந்த வரைவு மசோதா விடப்பட்டதுடன்,[20][21] சட்டமும் 1967ஆம் ஆண்டு திருத்தப்பட்டு இந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானம் நிறைவேற்றாதவரையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறாத வரையிலும் ஆங்கிலப் பயன்பாடு முடிவுக்கு வராது என்று நிறைவேற்றப்பட்டது[22]
தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசு இந்தியுடன் ஆங்கிலத்தையும் "துணை அலுவல் மொழியாக"[23] தொடர்ந்து தனது அலுவல்பணிகளில் பயன்படுத்தி வரும்.[24] அதே நேரம் தனது அலுவல்பணிகளில் இந்தியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் கூட்டிட ஓர் திட்டத்தினை வரைந்து அதனை செயலாக்க வேண்டும்.[25] இந்தி மற்றும் ஆங்கிலத்தின் பயன்பாடு எந்தளவு மற்றும் எப்பகுதிகளில் என்பதை அரசியலமைப்பு, அலுவல்மொழி சட்டம்,1963, அலுவல் மொழிகள் விதிகள் 1976 மற்றும் இந்தச் சட்டங்களின் கீழமைந்த அலுவல் மொழித்துறையின் சட்ட ஆவணங்களைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன.
நாடாளுமன்ற நடவடிக்கைகளும் சட்டங்களும்
இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்ற அவை நடைவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் மொழிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும் மொழிக்கும் வேறுபாட்டை வரையறுத்துள்ளது. நாடாளுமன்றம் தனது அவை நடைவடிக்கைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் நடத்தும்.[26] ஆங்கிலத்தின் பயன்பாடு 15 ஆண்டுகளில் முடிவடைவதாக இருந்ததை[27], நாடாளுமன்றம் அலுவல் மொழிகள் சட்டம் 1963 நிறைவேற்றியதன் மூலம் நீட்டித்துள்ளது.[28] தவிரவும், இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாட இயலாத உறுப்பினர், அவைத்தலைவர் அனுமதியுடன், தனது தாய்மொழியில் பேசலாம்.[29]
மாறாக, அரசியலமைப்பு அனைத்து அதிகாரமிக்க சட்ட உரைகளும், நாடாளுமன்ற மசோதாக்களும் சட்டபூர்வ ஆவணங்களும் உட்பட, ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது; நாடாளுமன்றம் மாறாக விரும்புமானால் இதற்குத் திருத்தம் கொணரலாம்.[30] இத்தகைய திருத்தம் எதனையும் நாடாளுமன்றம் கொண்டு வரவில்லை; தொடர்பாக அனைத்துச் சட்டங்களும் ஆவணங்களும், ஆங்கிலத்தின் உரையே அதிகாரபூர்வமாக இருக்குமெனினும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.[31]
நீதிமன்றங்கள்
இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலமே நடைமுறை மொழியாக இருக்கும் என வரையறுத்துள்ளது.[32] இதனை மாற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த அதிகாரத்தை இதுவரை பயன்படுத்த வில்லை.[33]
நிர்வாகம்
தனது அலுவல் பணிகளில் இந்தியின் பயன்பாட்டை நடுவண் அரசு கூடுதலாக்க வேண்டும்;[25] இதனை "வற்புறுத்தல்,ஊக்கத்தொகைகள் மற்றும் நம்பிக்கை" மூலம் செயலாக்க முனைந்துள்ளது.[34]
நடுவண் அரசின் பொதுமக்களுக்கு உரித்தான பெரும்பாலான நிர்வாக ஆவணங்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும் என்று அலுவல்மொழிச் சட்டம் குறிப்பிட்டுள்ளது.[35] அலுவல் மொழி விதிகள் மாறாக நடுவண் அரசின் அலுவலகங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றங்கள் கூடுதலாக இந்தியில் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது; இந்த விதிகள் தமிழ் நாட்டிற்கு செல்லாதாகையால் அங்குள்ள அலுவலகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.[36]). நடுவண் அரசின் இரு துறை/ அமைச்சரகங்களிடையே இந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; வேண்டுமானால் மற்ற மொழியில் மொழிமாற்றம் கொடுக்கலாம்.[37] ஒரே துறையின் கீழ் அலுவலகங்களிடையேயான தகவல்கள் இந்தி பேசும் மாநிலமானால் இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்;[38] பிற மாநிலங்களில் இந்தி அல்லது ஆங்கிலத்திலும், பெறும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்குள்ள இந்தி அறிவின் வீதத்தின்படி கூடுதலான இந்திப் பயன்பாடும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.[39] கோப்புகளில் உள்ள குறிப்புகளும் குறிப்பாணைகளும் இந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; விரும்பியவருக்கு மற்ற மொழியில் மொழிமாற்றம் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும்.[40]
தவிர, எந்த அரசு அலுவலகம் அல்லது அதிகாரி மீதான முறையீட்டை ஓர் இந்தியக் குடிமகன் எந்தவொரு இந்திய மொழியிலும் கொடுக்க அரசியலமைப்பின்படியான உரிமை கொண்டவராவார்.[41]
செயலாக்கம்
இந்திய அரசு இந்தி மொழியின் பயன்பாட்டை கூட்டிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல இந்தி செயல்திட்ட அலுவலகங்களை பெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, குவஹாட்டி, போபால், தில்லி மற்றும் காசியாபாத்தில் அமைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி மொழியின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது. ஓர் அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்தில் எத்தனை விழுக்காடு இந்தியில் இருத்தல் வேண்டும் என்பதற்கு அலுவல்மொழி அலுவலகம் ஆண்டு இலக்குகளை தீர்மானிக்கிறது. 1976ஆம் ஆண்டிலிருந்து அமைக்கப்படும் அலுவல்மொழி குறித்த நாடாளுமன்றக் குழு இந்த முன்னேற்றங்களை காலமுறை தோறும் மீளாய்வு செய்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்தியின் நிலை உயர்வை கண்காணித்து கொள்கை முடிவுகளை எடுக்க 1967ஆம் ஆண்டில் கேந்திரிய இந்தி சமிதி ஏற்படுதப்பட்டது. பத்து நடுவண் அரசு அலுவலகங்கள் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நகர அலுவல்மொழி செயல்திட்ட குழு ஏற்படுத்தப்பட்டு இந்தியில் கூடுதலாக அலுவல் புரியும் பணியாளர்களுக்குப் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தியின் பயன்பாட்டை கூட்டிட இந்திப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.[42]
மாநில அலுவல் மொழிகள்
இந்திய அரசியலமைப்பு மாநிலங்களில் அரசுப்பணிகளுக்கான அலுவல்மொழியை குறிப்பிடவில்லை; அந்தந்த மாநிலங்களே, அவற்றின் சட்டபேரவைகளின் மூலம், இந்தி அல்லது தங்கள் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு மொழிகளை தங்கள் அலுவல்மொழிகளாக தீர்மானித்துக் கொள்ளலாம்.[43] இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியாகக் கூட இருக்க வேண்டியதில்லை; காட்டாக, திரிபுராவில் கொக்பொரோக் , மிசோரமில் மிசோ , மேகாலயாவில் காசி, காரொ மற்றும் சைந்தியா, புதுச்சேரியில் பிரெஞ்சு அலுவல்மொழிகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன.
மாநிலங்கள்
ஒன்றியப் பகுதிகள்
எண். | ஒன்றியப் பகுதி | அலுவல் மொழி | பிற அலுவல் மொழிகள் |
---|---|---|---|
1. | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | இந்தி, ஆங்கிலம்[91] | |
2. | சண்டீகர் | பஞ்சாபி மொழி, இந்தி, ஆங்கிலம் | |
3. | தாத்ரா மற்றும் நகர் அவேலி | மராத்தி, குஜராத்தி | |
4. | தமன் தியூ | குஜராத்தி, ஆங்கிலம் | மராத்தி[55] |
5. | தில்லி | இந்தி, ஆங்கிலம் | உருது,[92] பஞ்சாபி மொழி[92] |
6. | இலட்சத்தீவுகள் | மலையாளம் | |
7. | புதுச்சேரி | பிரெஞ்சு, தமிழ் மற்றும் ஆங்கிலம்[93] | மலையாளம் (மாஹே), தெலுங்கு (ஏனாம்)[93] |
குறிப்புகள்
- ↑ Some languages may be over- or underrepresented as the census data used is at the state-level. For example, while Urdu has 52 million speakers (2001), in no state is it a majority as the language itself is primarily limited to Indian Muslims yet has more native speakers than Gujarati.
மேற்கோள்கள்
- ↑ "Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. Archived from the original (PDF) on 8 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 17 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 1. Schwartzberg, Joseph E., 2007. Encyclopedia Britannica, India—Linguistic Composition. Quote: "By far the most widely spoken is Hindi, the country's official language, with more than 300 million speakers." 2. Oldenburg, Phillip. (1997-2007) Encarta Encyclopedia "India: Official Languages." Quote: "Hindi is the main language of more than 40 percent of the population. No single language other than Hindi can claim speakers among even 10 percent of the total population. Hindi was therefore made India’s official language in 1965. English, which was associated with British rule, was retained as an option for official use because some non-Hindi speakers, particularly in Tamil Nādu, opposed the official use of Hindi." 3. United Kingdom, Foreign and Commonwealth Office: India—Country Profile. Quote: "The official language of India is Hindi written in the Devanagari script and spoken by some 30% of the population as a first language. Since 1965 English has been recognised as an 'associated language'." 4. UNESCO: Education for All—The Nine Largest Countries பரணிடப்பட்டது 2006-12-30 at the வந்தவழி இயந்திரம் Quote: "Hindi is the language of 30% of the population and the official language of India." 5. United States Library of Congress, Federal Research Division, Country Profile: India Quote: "Languages: Hindi is the official language and the most commonly spoken, but not all dialects are mutually comprehensible. English also has official status and is widely used in business and politics, although knowledge of English varies widely from fluency to knowledge of just a few words." 6 United Nations High Commissioner for Refugees, Country Profile: India Quote: "Hindi is constitutionally designated as the official language of India, with English as an associate official language."
- ↑ Jan 25, Saeed Khan; 2010; Ist, 0:34. "There's no national language in India: Gujarat High Court - India News - Times of India". The Times of India.
{{cite web}}
:|last2=
has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ Part XVII of the Constitution of India.
- ↑ Article 343 of the Constitution of India.
- ↑ Article 345 of the Constitution of India.
- ↑ Article 346 of the Constitution of India.
- ↑ Mollin, Sandra (2006). Euro-English: assessing variety status. Gunter Narr Verlag. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783823362500.
- ↑ "Kanchan Chandra, "Ethnic Bargains, Group Instability, and Social Choice Theory," Politics and Society 29, 3: 337-62".
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
- ↑ Article 343(1).
- ↑ Articles 343(2) and (3).
- ↑ "DOL".
- ↑ "Commissioner Linguistic Minorities". Archived from the original on 2009-09-19. பார்க்கப்பட்ட நாள் 2011-05-22.
- ↑ "Language in India". www.languageinindia.com.
- ↑ "THE OFFICIAL LANGUAGES ACT, 1963".
- ↑ "National Portal of India". www.india.gov.in.
- ↑ "Committee of Parliament on Official Language report" (PDF).
- ↑ Hardgrave, Robert L. (August 1965). "The Riots in Tamilnad: Problems and Prospects of India's Language Crisis". Asian Survey (University of California Press)
- ↑ "The force of words", Time, 1965-02-19, archived from the original on 2013-08-24, பார்க்கப்பட்ட நாள் 2007-06-05
- ↑ Forrester, Duncan B., "The Madras Anti-Hindi Agitation, 1965: Political Protest and its Effects on Language Policy in India", Pacific Affairs, 39 (1/2): 19–36 Spring — Summer 1966, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/2755179.
- ↑ Official Languages Act, 1963, S. 3(5) பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Notification No. 2/8/60-O.L. (Ministry of Home Affairs), dated 27th April, 1960.
- ↑ Official Languages Act, 1963, S. 3(1) பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ 25.0 25.1 Official Languages Resolution, 1968, para. 1.
- ↑ Article 120(1).
- ↑ Article 120(2).
- ↑ Official Languages Act, 1963, S. 3(1)(b) பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Article 120(1) first proviso.
- ↑ Article 348(1).
- ↑ Official Languages Act, 1963, Ss. 5(1) and (2) பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ Article 348(1)(a).
- ↑ Article 348(1), leading text.
- ↑ "Official language policy of the Union."
- ↑ S. 3(3) பரணிடப்பட்டது 2009-12-10 at the வந்தவழி இயந்திரம் names, amongst others, resolutions, general orders, rules, notifications, administrative or other reports or press communiques issued by a government department, agency or corporation; administrative and other reports and official papers laid before a House or the Houses of Parliament; and ஒப்பந்தம்s and agreements executed, and licences, permits, notices and forms of tender issued by or on behalf of the government (including government companies).
- ↑ Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, paragraph 1(ii)
- ↑ Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, paragraph 4(a)
- ↑ Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, paragraphs 4(b) and (c)
- ↑ Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, paragraph 4(d)
- ↑ Official Languages (Use for Official Purpose of the Union) Rules, 1976, paragraph 8
- ↑ Constitution of India, Article 350.
- ↑ "Official Language - Constitutional/Statutory Provisions". இந்திய அரசு.
- ↑ Constitution of India, Article 345
- ↑ The Andhra Pradesh Official Language Act, 1966, declares Telugu to be the official language. This enactment was implemented by GO Ms No 420 in 2005. Rao, M. Malleswara (September 18, 2005), "Telugu declared official language", தி இந்து (Online edition), archived from the original on 2007-08-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ உருது is used as a second official language in certain districts for certain specific purposes. Fatihi, A.R., "உருது in Andhra Pradesh", Language in India, 3 (4), ISSN: 1930-2940, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 2.4, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ The official language of the state is English and Hindi is taught as a second language in school.Das, Varsha. "Production of Literacy Materials in Minor Languages" (PDF). National Book Trust of India. Archived from the original (PDF) on 25 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Five languages spoken by the principal tribes in Arunachal Pradesh - Adi, Apatani, Bhoti, Khampti and Nishi are offered to students in state schools, however English is the language of administration and recruitment. Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 2.3–2.4, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 49.0 49.1 Assamese is the official language of the State. Bodo is used as an associate official language for specific purposes in the districts of Kokrajhar and Nalbari and in the Udalguri sub division. Bengali is used for administrative and other official purposes in the districts of the Barak valley.Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 3.5, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-06-06. See also Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 3.4, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ In three districts of Barak Valley in Assam
- ↑ Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 20.5, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ உருது is recognised as an additional official language for seven specific purposes, namely, receiving and replying to representations from the public; receiving documents in government offices; publishing rules, regulations and notices; issuing important letters and orders; publishing important advertisements; publishing government gazettes; and signboards at important places and offices.Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 20.5, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ The The Chhattisgarh Official Language (Amendment) Act, 2007 added "Chhattisgarhi" as an official language of the state, in addition to Hindi."The Chhattisgarh Official Language (Amendment) Act, 2007". Government of India. Archived from the original on 1 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 May 2011.
- ↑ 54.0 54.1 Commissioner Linguistic Minorities, 39th report: July 2000 - June 2001, p. section 6, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ 55.0 55.1 The Goa, Daman and Diu Official Language Act, 1987 makes Konkani the sole official language, but provides that Marathi may also be used for "for all or any of the official purposes". The Government also has a policy of replying in Marathi to correspondence received in Marathi. Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 11.3, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-06-06 A petition is pending before the Supreme Court demanding official language status to Marathi as well. UNI (May 30, 2007), Marathi vs Konkani debate continues in Goa, பார்க்கப்பட்ட நாள் 2007-06-06
- ↑ 56.0 56.1 56.2 "Report of the Commissioner for linguistic minorities: 50th report (July 2012 to June 2013)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. Archived from the original (PDF) on 8 July 2016. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
- ↑ Kurzon, Dennis (2004). "3. The Konkani-Marathi Controversy : 2000-01 version". Where East Looks West: Success in English in Goa and on the Konkan Coast. Multilingual Matters. pp. 42–58. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85359-673-5. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014. Dated, but gives a good overview of the controversy to give Marathi full "official status".
- ↑ 58.0 58.1 Fatihi, A.R. (September 9, 2003), "உருது in Gujarat", Language in India, 3, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 59.0 59.1 Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 28.3, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ Punjabi is officially designated as the "second language" of Haryana in March 2010. Before that, Tamil was the official second language.Punjabi edges out Tamil in Haryana
- ↑ Himachal Pradesh adopted Hindi as the sole official language in 2008.Hindi to be official language of H.P. பரணிடப்பட்டது 2011-09-24 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 29.7, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ Pratibha Chauhan (17 February 2019). "Bill to make Sanskrit second official language of HP passed". The Tribune (Shimla). https://www.tribuneindia.com/news/himachal/bill-to-make-sanskrit-second-official-language-of-hp-passed/730075.html.
- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 18. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 February 2018.
- ↑ "Jharkhand gives second language status to Magahi, Angika, Bhojpuri and Maithili". The Avenue Mail. 21 March 2018 இம் மூலத்தில் இருந்து 28 March 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190328090028/https://www.avenuemail.in/ranchi/jharkhand-gives-second-language-status-to-magahi-angika-bhojpuri-and-maithili/118291/.
- ↑ "Jharkhand notifies Bhumij as second state language". The Avenue Mail. 5 January 2019. https://avenuemail.in/jharkhand-notifies-bhumij-as-second-state-language/.
- ↑ "The Karnataka Official Language Act, 1963" (PDF), Official website of Government of Karnataka, Government of Karnataka, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ "The Karnataka Local Authorities (Official Language) Act, 1981" (PDF), Official website of Government of Karnataka, Government of Karnataka, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ 69.0 69.1 "Malayalam, How to Arrest its Withering Away?", M. K. Chand Raj, Ph.D. on Language in India, Central Institute of Indian Languages,Mysore, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ "Language and Literature", Official website of Government of Madhya Pradesh, Government of Madhya Pradesh, archived from the original on 2007-09-29, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ "Maharashtra Tourism: Trivia", Official website of Maharashtra Tourism, Government of Maharashtra, archived from the original on 2021-05-02, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ Palkar, A.B (2007), Report of One Man Commission Justice A.B.Palkar: Shri Bhaurao Dagadu Paralkar & Others V/s State of Maharashtra (PDF), vol. I, p. 41, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ Section 2(f) of the Manipur Official Language Act, 1979 states that the official language of Manipur is the Manipuri language (an older English name for the Meitei language) written in the Bengali script. The Sangai Express, Mayek body threatens to stall proceeding, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 25.5, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16
- ↑ The 43rd report of the National Commission of Linguistic Minorities reports that, from a date to be determined, Khasi will have the status of an associate official language in the districts of the East Khasi Hills, West Khasi Hills, Jaintia Hills and Ri Bhoi. Garo will have a similar status in the districts of the East Garo Hills, West Garo Hills and South Garo Hills. Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, p. para 25.1, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16. On the 21st of March 2006, the Chief Minister of Meghalaya stated in the State Assembly that a notification to this effect had been issued. Meghalaya Legislative Assembly, Budget session: Starred Questions and Answers - Tuesday, the 21st March 2006., archived from the original on 2007-09-27, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 76.0 76.1 Mizo is the sole official language under the Official Languages Act. However, this statute does not apply to autonomous regions of Mizoram.Commissioner Linguistic Minorities, 41st report: July 2002 - June 2003, p. paras 28.4, 28.9, archived from the original on 2007-02-24, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 77.0 77.1 Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, p. para 17.4, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 78.0 78.1 Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 5.4, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ 79.0 79.1 Punjabi is the official language of the state. Section 8 of Punjab's Official Language Act requires the state Government to "take suitable steps to develop the Hindi language in the State" but does not give Hindi any official status. Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 19.6, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-06-06.
- ↑ Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 26.4, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ "1977 Sikkim government gazette" (PDF). sikkim.gov.in. Governor of Sikkim. p. 188. Archived from the original (PDF) on 22 July 2018. பார்க்கப்பட்ட நாள் 22 July 2018.
- ↑ Whilst Tamil is the only official language, important communications are published in minority languages, and electoral rolls are published in Telugu, Kannada and Malayalam in areas where they are widely used. Commissioner Linguistic Minorities, 42nd report: July 2003 - June 2004, p. para 15.4, archived from the original on 2007-10-08, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ "Urdu is Telangana's second official language" (in en-US). இந்தியன் எக்சுபிரசு. 16 November 2017. http://indianexpress.com/article/india/urdu-is-telanganas-second-official-language-4940595/.
- ↑ "Urdu is second official language in Telangana as state passes Bill". The News Minute. 17 November 2017. https://www.thenewsminute.com/article/urdu-second-official-language-telangana-state-passes-bill-71742.
- ↑ "Bengali and Kokborok are the state/official language, English, Hindi, Manipuri and Chakma are other languages". Tripura Official government website இம் மூலத்தில் இருந்து 12 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150212025154/http://tripura.gov.in/knowtripura.
- ↑ Tripura Official Language Act, 1964 www.lawsofindia.org
- ↑ Tripura Official Language Act, 1964 lawsofindia.blinkvisa.com, accessed 4 August 2020
- ↑ Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 – June 2005, pp. paras 6.1–6.2, archived from the original on 10 April 2009, பார்க்கப்பட்ட நாள் 16 July 2007
- ↑ Bengali is the official language of West Bengal. Nepali is recognised as an additional official language in டார்ஜிலிங் மாவட்டம். In addition, the government has a policy of replying to representations received in minority languages in those languages. Commissioner Linguistic Minorities, 43rd report: July 2004 - June 2005, pp. para 18.4, archived from the original on 2009-04-10, பார்க்கப்பட்ட நாள் 2007-07-16.
- ↑ Bengal will now have as many as six "second official" languages..... English and Bengali are the two official (presumably, first official) languages of the state. To these will be added Urdu, Gurmukhi, Nepali, Ol-Chiki, Oriya and Hindi. Roy, Anirban (27 May 2011). "West Bengal to have six more languages for official use". இந்தியா டுடே. http://indiatoday.intoday.in/site/story/west-bengal-mamata-banerjee-recognizes-six-non-bengali-languages/1/139450.html. பார்த்த நாள்: 1 July 2011.
- ↑ "Most of Indian languages are spoken in Andaman and Nicobar Islands because of its cosmopolitan nature. The common language is Hindi whereas English and Hindi are used in official correspondence." Andaman District Administration, Profile, archived from the original on 2011-12-13, பார்க்கப்பட்ட நாள் 2007-06-06
- ↑ 92.0 92.1 Urdu and Punjabi are the second official languages of Delhi under the Delhi Official Language Bill, 2000 Punjabi, Urdu made official languages in Delhi, தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2003-06-25, பார்க்கப்பட்ட நாள் 2007-07-17
- ↑ 93.0 93.1 Three languages are used for official purposes - Tamil, Telugu, and Malayalam. However, English and French are also reorganized for official purpose as per the official language policy. The official language policy of the union territory states that the Tamil language should be used for all or any of the official purposes of the union territory. In case of Mahe and Yanam, Malayalam and Telugu may be respectively used for official purpose. The English language may also be used for all or any of the official purposes. The French language shall remain the official language of the establishments so long as the elected representatives of the people shall not decide otherwise (ACT 28, Gazetteer, Pondicherry Vol. 1, P. II)Multilingualism and second language acquisition and learning in Pondicherry
வெளியிணைப்புகள்
- Department of Official Language (DOL) – Official webpage explains the chronological events related to Official Languages Act and amendments
- Central Institute of Indian Languages – A comprehensive federal government site that offers complete info on Indian Languages
- Reconciling Linguistic Diversity: The History and the Future of Language Policy in India by Jason Baldridge
- Ethnologue – Ethnologue report on the languages of India
- TDIL-MCIT,GoI பரணிடப்பட்டது 2010-01-30 at the வந்தவழி இயந்திரம் – Technology Development for Indian Languages, Government of India
- The force of words - A TIME magazine article about India's language controversy பரணிடப்பட்டது 2011-09-21 at the வந்தவழி இயந்திரம்
- Multi-lingualism and language policy in India பரணிடப்பட்டது 2018-12-25 at the வந்தவழி இயந்திரம்