பள்ளிபாளையம்
பள்ளிபாளையம் | |||||||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||||||
அமைவிடம்: பள்ளிபாளையம், தமிழ் நாடு , இந்தியா
| |||||||
ஆள்கூறு | 11°22′N 77°46′E / 11.36°N 77.76°ECoordinates: 11°22′N 77°46′E / 11.36°N 77.76°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ் நாடு | ||||||
மாவட்டம் | நாமக்கல் | ||||||
வட்டம் | குமாரபாளையம் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
நகராட்சித் தலைவர் | |||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
35,214 (2001[update]) • 7,492/km2 (19,404/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 4.70 சதுர கிலோமீட்டர்கள் (1.81 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.municipality.tn.gov.in/Pallipalayam |
பள்ளிபாளையம் (ஆங்கிலம்:Pallipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். அக்டோபர் 7, 2004ல் இது பேரூராட்சியிலிருந்து மூன்றாம் நிலை நகராட்சியாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது இரண்டாம் நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
இது காவிரி ஆற்றின் கரையோரமாக அமைந்துள்ளது. ஆற்றுக்கு எதிர்புறம் (மேற்குப் பகுதியில்) ஈரோடு நகரம் உள்ளது. காவிரியின் கரையோரமாக இருந்தபோதிலும் இது பாறைகள் கூடிய இடமாகும். விசைத்தறி கூடங்கள் அதிகளவில் உள்ளன. விசைத்தறி கூடம் சார்ந்த சாயப் பட்டறை கழிவுகள் ஆற்றில் கலப்பதால் ஆறு மாசுபடுகிறது. பள்ளிபாளையம் சிக்கன் என்ற உணவு புகழ் பெற்றதாகும்.
தொழிலுக்கு ஈரோட்டிலும் சார்ந்து இருப்பதால் ஈரோட்டின் வளர்ச்சிக்கும் பள்ளிபாளையம் சார்ந்து இருப்பதால் ஈரோடு மாநகரின் துணை நகராக பள்ளிபாளையம் கருதப்படுகிறது[1]
இந்நகரம், ஈரோட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், குமாரபாளையத்திலிருந்து தென்கிழக்கே 13 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இது ஈரோடு மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரமாகும். ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும், ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,214 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பள்ளிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பள்ளிபாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
2011 உள்ளாட்சி தேர்தல்
2011ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெள்ளியங்கிரி பி.எசு வெற்றி பெற்று நகரவை தலைவரானார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கணேசன் ஆர் | தேமுதிக | 2947 |
குமார் அ | திமுக | 9008 |
பழனியப்பன் எம் | பாமக | 190 |
பெஞ்சமின் ஜே | காங்கிரசு | 319 |
வெள்ளியங்கிரி பி.எஸ் | அதிமுக | 11831 |
2022 உள்ளாட்சி தேர்தல்
2022ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் திரு மோ செல்வராஜ் வெற்றி பெற்று நகரவை தலைவரானார்.