துவாக்குடி
துவாக்குடி நகராட்சி | |||||||
அமைவிடம் | 10°45′09″N 78°49′47″E / 10.7526°N 78.8298°ECoordinates: 10°45′09″N 78°49′47″E / 10.7526°N 78.8298°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
வட்டம் | திருவெறும்பூர் வட்டம் | ||||||
[[தமிழ்நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]] | |||||||
[[தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]] | |||||||
நகராட்சி தலைவர் | இ.காயாம்பு | ||||||
மக்களவைத் தொகுதி | துவாக்குடி நகராட்சி | ||||||
மக்கள் தொகை | 21,460 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 120 மீட்டர்கள் (390 அடி) | ||||||
குறியீடுகள்
|
துவாக்குடி (English: Thuvakudi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளியின் கூட்டுப் புறநகர்ப் பகுதியில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 9,402 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 38,887 ஆகும். அதில் 21,112 ஆண்களும், 17,775 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 89% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 842 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3261 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் 956 வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,835 மற்றும் 386 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 83.68%, இசுலாமியர்கள் 5.05%, கிறித்தவர்கள் 10.8% மற்றும் பிறர் 0.48% ஆகவுள்ளனர்.[1]
இவ்வூரின் சிறப்பு
இவ்வூர் முற்காலத்தில் துழாய்க்குடி என்றழைக்கப்பட்டு, பின்னர் மருவி துவாக்குடி என்றழைக்கப் படுகிறது. இவ்வூரில் உள்ள சோழீசுவரர் கோவில் கல்வெட்டுகளின் மூலம் இத்தகவல் அறியப்படுகிறது.
தமிழ்நாட்டிற்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.