திருவெறும்பூர்
திருவெறும்பூர் | |
---|---|
மாநகர் புறநகர் | |
திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 10°47′06.4″N 78°46′30.0″E / 10.785111°N 78.775000°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 119 m (390 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 16,835 |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | TN-81, TN-45 (பழைய எண்) |
திருவெறும்பூர் (Thiruverumbur) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி அருளிலுள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது 2011 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாநகராட்சியுடன் இணைக்கபட்டது.[1] இது திருஎறும்பூர் என்பது திரிந்து திருவெறும்பூர் என மாறியது. அதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள திரு எறும்பீஸ்வரர் கோயிலின் புராண பெயர் காரணமாக இந்நகருக்கு இப்பெயர் ஏற்பட்டது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,835 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவெறும்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவெறும்பூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
போக்குவரத்து
திருவெறும்பூரில் தொடர்வண்டி நிலையம் உள்ளது. இங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், வேளாங்கண்ணி, காரைக்கால், மைசூர், மயிலாடுதுறை, ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் உள்ளன.
முக்கிய இடங்கள்
- பாரத மிகு மின் நிறுவனம், இந்தியாவின் முதன்மை பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.
- படைக்கலத் தொழிற்சாலை திருச்சிராப்பள்ளி (ஓஎஃப்டி) இந்திய அரசின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தால் நடத்தப்படும் ஓர் தயாரிப்பு தொழிற்சாலை ஆகும்.இங்கு துப்பாக்கிகள், துப்பாக்கி இரவைகள், இந்திய வான்படை மற்றும் காவல்துறைகளுக்கான படைக்கலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
- கனரக கலப்புலோக ஊடுருறுத் திட்டம் (எச்ஏபிபி) - படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியம்.
- பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம் (BIM), திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு.
- சவகர்லால் நேரு விளையாட்டரங்கம் – கைலாசபுரம்
- குன்றின் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவத்தலம் (திரு எறும்பீசுவரர்)
- மான்கள் பூங்கா – கைலாசபுரம்.
- தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
ஆதாரங்கள்
- ↑ "Tiruchi Corporation begins delimitation survey". 31 August 2017. https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/tiruchi-corporation-begins-delimitation-survey/article19592362.ece.
- ↑ "மக்கள் தொகை". web.archive.org. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2022-10-06.