ஆலம்பாளையம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆலாம்பாளையம்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் எஸ். உமா, இ. ஆ. ப
மக்கள் தொகை

அடர்த்தி

20,286 (2011)

1,966/km2 (5,092/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.32 சதுர கிலோமீட்டர்கள் (3.98 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/aalampalayam

ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி ஈரோடு மாநகராட்சியின் மேற்கு புறத்தில் 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் வட்டாரத்தில் சேஷசாயி காகித ஆலை நிறுவனமும் [3], காவேரி ரயில் நிலையமும்[4] உள்ளது. இப்பேரூராட்சியின் பெரும்பான்மையான தொழிலாக கருதப்படுவது விவசாயமும், நெசவும் ஆகும்

அமைவிடம்

ஆலம்பாளையம் பேரூராட்சி, திருச்செங்கோடு - ஈரோடு செல்லும் சாலையில், நாமக்கல்லிருந்து 48 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்செங்கோடு 15 கிமீ; மேற்கில் ஈரோடு 7 கிமீ; வடக்கில் பரமத்தி-வேலூர் 45 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 15 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

10.32 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குமாரபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [5]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 5,785 வீடுகளும், 20,286 மக்கள்தொகையும் கொண்டது. [6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-12-18. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  4. https://indiarailinfo.com/arrivals/cauvery-cv/6598
  5. "ஆலம்பாளையம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-10. பார்க்கப்பட்ட நாள் 2019-04-10.
  6. Alampalayam Population Census 2011


"https://tamilar.wiki/index.php?title=ஆலம்பாளையம்&oldid=124647" இருந்து மீள்விக்கப்பட்டது