மல்லசமுத்திரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மல்லசமுத்திரம்
மல்லசமுத்திரம்
இருப்பிடம்: மல்லசமுத்திரம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°29′N 78°02′E / 11.48°N 78.03°E / 11.48; 78.03Coordinates: 11°29′N 78°02′E / 11.48°N 78.03°E / 11.48; 78.03
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
வட்டம் திருச்செங்கோடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

18,007 (2011)

3,198/km2 (8,283/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

5.63 சதுர கிலோமீட்டர்கள் (2.17 sq mi)

224 மீட்டர்கள் (735 அடி)

இணையதளம் www.townpanchayat.in/mallasamudram

மல்லசமுத்திரம் (ஆங்கிலம்:Mallasamudram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில், திருச்செங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இவ்வூரில் உள்ளது. இப்பேரூராட்சியில் துண்டு, கைலிகள் உற்பத்தி செய்யப்பட்டும், விவசாயம் செய்யப்பட்டும் வருகிறது.[சான்று தேவை]

அமைவிடம்

மல்லசமுத்திரம் பேரூராட்சிக்கு கிழக்கில் நாமக்கல் 40 கிமீ; மேற்கில் ஈரோடு 36 கிமீ; வடக்கில் சேலம் 26 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

5.63 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [3]

மக்கள் தொகை பரம்பல்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 4,895 வீடுகளும், 18,007 மக்கள்தொகையும் கொண்டது.[4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் Coordinates: Missing latitude
Invalid arguments have been passed to the {{#coordinates:}} function ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கோவில்கள்

இதன் அருகில் காளிபட்டி கந்தசாமி கோயில் உள்ளது.[சான்று தேவை] தைப்பூசம் மிகவும் புகழ் பெற்ற திருவிழா ஆகும்.

பெயர்க்காரணம்

மல்லர்கள் (பல்லவர்கள்) 2 ஆம் புலிகேசி மீது படையெடுத்து செல்லும்போது அந்த சின்ன ஊரை கடக்க நேரிட்டது, இருபுறமும் கடல் போல் தோற்றமளித்த ஏரியையும் மறுபுறம் ஓடிய பொன்னி நதியையும் பார்த்து அழகான ஊருக்கு "மல்லர்களின் சமுத்திரம்" என்று பெயரிட்டனர். நாளடைவில் மல்லசமுத்திரம் என்று அழைக்கப்படலாயிற்று.[சான்று தேவை]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. மல்லசமுத்திரம் பேரூராட்சியின் இணையதளம்
  4. Mallasamudram Population Census 2011
  5. "Mallasamudram". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/index.php?title=மல்லசமுத்திரம்&oldid=124529" இருந்து மீள்விக்கப்பட்டது