வால்பாறை
வால்பாறை | |||
— தேர்வு நிலை நகராட்சி — | |||
அமைவிடம் | 10°22′N 76°58′E / 10.37°N 76.97°ECoordinates: 10°22′N 76°58′E / 10.37°N 76.97°E | ||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||
வட்டம் | வால்பாறை | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3] | ||
நகர்மன்றத் தலைவர் | |||
சட்டமன்றத் தொகுதி | வால்பாறை
- | ||
சட்டமன்ற உறுப்பினர் |
டி. கே. அமுல் கந்தசாமி (அதிமுக) | ||
மக்கள் தொகை | 70,859 (2011[update]) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு • உயரம் |
• 1,193 மீட்டர்கள் (3,914 அடி) | ||
குறியீடுகள்
|
வால்பாறை (ஆங்கிலம்:Valparai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும்.
புவியியல்
கோயம்புத்தூர் மாவட்டத்தில், (10°19′37″N 76°57′19″E / 10.3270°N 76.9554°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, வால்பாறை அமைந்துள்ளது.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1193 மீட்டர் (3914 அடி) உயரத்தில் இருக்கின்றது.தென்னிந்தியாவின் சிரபுஞ்சி எனப்படும் சிற்றூரான சின்னகல்லார் இங்கு தான் உள்ளது.
Lua error in Module:Location_map/multi at line 143: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India Coimbatore" does not exist.
வால்பாறை நகராட்சி
பரப்பளவு | |||
---|---|---|---|
13.64 ச. கிமீ | |||
மக்கள் தொகை | |||
2011 கணக்கெடுப்பின்படி | 70,589 | ||
நகராட்சி மண்டலங்கள் | |||
வால்பாறை நகராட்சி | |||
நகராட்சி வட்டங்கள் | |||
21 வட்டங்கள் | |||
இம்மன்றத்திற்காக அமைக்கபெற்ற நிலைக்குழுக்கள் | |||
வரி மற்றும் நிதிக் குழு | |||
பணிக்குழு | |||
திட்டக் குழு | |||
நல்வாழ்வுக் குழு |
மக்கள் வகைப்பாடு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 70,859 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.4% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.[5]
போக்குவரத்து
பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 40 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. மாநில நெடுஞ்சாலை 78 இல் பொள்ளாச்சியில் இருந்து வால்பாறையை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகும். வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், உடுமலைப்பேட்டை மற்றும் பழனி, சாலக்குடி, சேலம் மண்ணார்காடு ஆகிய இடங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
கல்வி நிறுவனங்கள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
- தூய இருதய ஆரம்பப்பள்ளி
- தூய இருதய மகளிர் -மேல்நிலைப்பள்ளி
- தூய இருதய மேல்நிலைப்பள்ளி
- பியூளா மேல்நிலைப்பள்ளி
- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
- அரசு கலை அறிவியல் கல்லூரி, வால்பாறை
மலைகளின் இளவரசி
வால்பாறை பொதுவாக மலைகளின் இளவரசி என வர்ணிக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள தொடர்ச்சியான மலைத்தொடர்கள் கண்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாடுகள் அதிகமாக இந்த மலைப்பகுதியில் காணமுடியும். மேலும் தேயிலைத் தோட்டங்கள், ஆங்காங்கே காணப்படும் நீரூற்றுகள், அருவிகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Valparai". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2007.
- ↑ வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்
மேலும் பார்க்க
- வால்பாறை நகராட்சி இணையதளம் பரணிடப்பட்டது 2010-09-27 at the வந்தவழி இயந்திரம்
- சுற்றுலா தகவல் மையம் பரணிடப்பட்டது 2017-09-15 at the வந்தவழி இயந்திரம்