ஆலந்துறை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆலந்துறை (ஆலாந்துறை)
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் பேரூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பதி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

7,221 (2011)

333/km2 (862/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 21.68 சதுர கிலோமீட்டர்கள் (8.37 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/alandurai

'ஆலாந்துறை (ஆங்கிலம்:Alanthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

இது நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இப்பேருராட்சி பகுதியில் உள்ள பூண்டி அருகில் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயில், ஈஷா யோக மையம் மற்றும் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. சுற்றுலா தலங்களான கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி அணை இப்பேரூராட்சிக்கு அருகில் அமைந்துள்ளது.

அமைவிடம்

கோவை - சிறுவாணி செல்லும் பாதையில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆலந்துறை பேருராட்சி அமைந்துள்ளது. இது கோயம்புத்தூருலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் உள்ள ஊர்கள், பூளுவப்பட்டி 2 கிமீ, பூண்டி 10 கிமீ, தொண்டாமுத்தூர் 8 கிமீ தொலைவில் உள்ளது.

போக்குவரத்து:

             ஆலாந்துறை பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது.மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோகா

போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது.எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

   கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14F,14H,59, 59A,59C,64J ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
                 திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்பு

21.68 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 35 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2004 வீடுகளும், 7221 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]

பெயர்க்காரணம்

துறை என்பது ஆற்றங்கரையில் அமைந்த ஊர்களைக்குறிக்கும்.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த காரணம் பற்றி இப்பெயர் பெற்றிருக்கலாம்.

கல்வி, மொழி மற்றும் கலாச்சாரம்

தமிழ் மொழியே பெரும்பாலும் முதன்மை மற்றும் நாளாந்த மொழியாக உள்ளது. இளைய தலைமுறையினர், ஆங்கிலம் அறிந்தவர்களாக உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. வளர்த்துவரும் குறு நகராகவும் உள்ளது. பெருவாரியான உணவகங்கள்,அரசு மற்றும் இந்திய வங்கிகள் உள்ளது.அருகே உள்ள நாதேகவுண்டன் புதூரில் பொறியியல் கல்லூரியும் இச்சிறிய நகரைசுற்றி தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன.மாரி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது.மேலும் வருமான வரி அலுவலகம் இங்குதான் உள்ளது.பலதப்பட்ட மக்கள் வசிக்கும் குறு நகரமாக வளர்ந்து வருகிறது.பழனி பாதயாத்திரை (பாதைபயணம்) மற்றும் சபரி மலை பாதயாத்திரை (பாதைபயணம்) செல்வோர் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகம்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு

வேளாண்மை முதன்மை தொழில். மேலும் வேளாண் சார்த்த தொழில்கள், ஆலாந்துறை முதன்மை சாலையில் அமைந்துள்ளதால் தேநீர் விடுதி, அடுமனை முதலானவையும் இங்கு நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "ஆலந்துறை பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-04-01.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-01. பார்க்கப்பட்ட நாள் 2019-04-01.
  6. Alanthurai Town Panchayat Population Census 2011
"https://tamilar.wiki/index.php?title=ஆலந்துறை&oldid=123619" இருந்து மீள்விக்கப்பட்டது