பூளுவப்பட்டி
பூலுவபட்டி | |
— பேரூராட்சி — | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கோயம்புத்தூர் |
வட்டம் | பேரூர் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
12,853 (2011[update]) • 779/km2 (2,018/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 16.5 சதுர கிலோமீட்டர்கள் (6.4 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/pooluvapatti |
பூலுவபட்டி (ஆங்கிலம்:Pooluvapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பூலுவபட்டி பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சிக்கு அருகில் புகழ்பெற்ற பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலும், ஈசா யோகா மையமும் மற்றும் காருண்யா பலகலைகழகமும் சுமார் 8கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கோவை குற்றாலம் மற்றும் சிறுவாணி அணைக்கட்டு பகுதிகள் சுமார் 8கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள ஊர்கள், தென்கரை 4 கிமீ, ஆலந்துறை 2 கிமீ; தொண்டாமுத்தூர் 8 கிமீ; மதுக்கரை, 15 கிமீ தொலைவில் உள்ளது.
போக்குவரத்து:
பூலுவப்பட்டி பேரூராட்சி கோவை - சிறுவாணி சாலையில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளியங்கிரி மலை, ஈஷா யோக மையம் போன்ற முக்கிய வழிபாட்டுத் தலங்கள் செல்லும் வழியில் அமைந்துள்ளது. எனவே எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்திலிருந்து 14,14A,14B,14C,14D,14E,14G,14F,14H,59,59B,59A,59C,59D/E, ஆகிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர பூண்டி மற்றும் சாடிவயல் , கோவை குற்றாலம், சிறுவாணி செல்லும் புறநகர் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. திருப்பூரில் இருந்து பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலுக்கு குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து இயக்கப்படுகிறது.
பேரூராட்சியின் அமைப்பு
16.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 38 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,575 வீடுகளும், 12,853 மக்கள்தொகையும் கொண்டது.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pooluvapatti Town Panchayat Population Census 2011