செல்வம் அடைக்கலநாதன்
செல்வம் அடைக்கலநாதன் | |
---|---|
2015 இல் அடைக்கலநாதன் | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2000 | |
தொகுதி | வன்னி மாவட்டம் |
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் | |
பதவியில் 1 செப்டம்பர் 2015 – 2 மார்ச் 2020 | |
முன்னவர் | முருகேசு சந்திரகுமார் |
பின்வந்தவர் | அங்கஜன் இராமநாதன் |
தலைவர் தமிழீழ விடுதலை இயக்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1986 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | அமிர்தநாதன் அடைக்கலநாதன் 10 சூன் 1962 |
அரசியல் கட்சி | தமிழீழ விடுதலை இயக்கம் |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
இருப்பிடம் | மன்னார் |
செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan; பிறப்பு: சூன் 10, 1962) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் முன்னாள் போராளியும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) தற்போதைய தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
வடக்கு இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த அடைக்கலநாதன், தனது 15வது அகவையில் டெலோ இயக்கப் போராளியாக இணைந்தார்.[2] டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் 1986 மே 5 இல் கொல்லப்பட்டதை அடுத்து செல்வம் அடைக்கலநாதன் அவ்வியக்கத்தின் தலைவரானார்.[2]
அரசியலில்
செல்வம் அடைக்கலநாதன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈதேசவிமு/ஈமபுவிமு/டெலோ/தவிகூ கூட்டு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டார். க்ட்டணி வேட்பாளர்களில் மூன்ற்ஃபாவது அதிகப்படியான விருப்பு வாக்குகள் பெற்றிருந்தும், நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.[3][4] இவர் மீண்டும் 2000 தேர்தலில் டெலோ வேட்பாளராகப் போட்டியிட்டு இலங்கை நாடாளுமன்றம் சென்றார்.[5]
2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியன இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆரம்பித்தன.[6][7] அடைக்கலநாதன் 2001 தேர்தலில் டெலோ சாஅர்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[8] இவர் மீண்டும் 2004,[9] 2010,[10][11] 2015 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[12][13] இலங்கையின் 15-வது நாடாளுமன்றம் 2014 செப்டம்பர் 1 இல் கூடிய போது, இவர் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[14][15]
அடைக்கலநாதன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16][17][18]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
1989 நாடாளுமன்றம்[3] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | ஈ.என்.டி.எல்.எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/ தவிகூ |
தெரிவு செய்யப்படவில்லை | |||
2000 நாடாளுமன்றம்[5] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தெரிவு | ||||
2001 நாடாளுமன்றம்[8] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2004 நாடாளுமன்றம்[9] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2010 நாடாளுமன்றம்[19] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம்[20] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2020 நாடாளுமன்றம்[21] | வன்னி மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: Selvam Adaikkalanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/1247. பார்த்த நாள்: 24 September 2020.
- ↑ 2.0 2.1 "We are on the correct path'". புரொண்ட் லைன் 21 (21). 9 அக்டோபர் 2004. http://www.frontlineonnet.com/fl2121/stories/20041022000905200.htm.
- ↑ 3.0 3.1 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Colombo Sri Lanka: Associated Newspapers of Ceylon Limited. பக். 184 இம் மூலத்தில் இருந்து 23 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf.
- ↑ "Results of Parliamentary General Election – 1989". Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 33. https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1989.pdf. பார்த்த நாள்: 18 September 2020.
- ↑ 5.0 5.1 "Parliamentary General Election - 2000 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015333/http://www.slelections.gov.lk/pdf/preference2000GE.PDF.
- ↑ D. B. S. Jeyaraj (27 March 2010). "Tamil National Alliance enters critical third phase – 1". Daily Mirror (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 April 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100404042520/http://www.dailymirror.lk/print/index.php/opinion1/6933.html.
- ↑ "Tamil parties sign MOU". தமிழ்நெட். 20 October 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6400. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ 8.0 8.1 "Parliamentary General Election - 2001 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 5 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf.
- ↑ 9.0 9.1 "Parliamentary General Election - 2004 - Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 199 இம் மூலத்தில் இருந்து 4 March 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.
- ↑
- ↑ "General Elections 2010 -- Preferential Votes". Sunday Times (Colombo, Sri Lanka). 11 April 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Thilanga appointed Deputy Speaker". Daily Mirror (Colombo, Sri Lanka). 1 September 2015. http://www.dailymirror.lk/85591/thilanga-appointed-deputy-speaker. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Thilanga appointed Deputy Speaker". Ceylon Today (Colombo. Sri Lanka). 1 September 2015 இம் மூலத்தில் இருந்து 23 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923202034/http://www.ceylontoday.lk/16-102533-news-detail-thilanga-appointed-deputy-speaker.html.
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ டி. பி. எஸ். ஜெயராஜ் (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "Parliamentary General Election - 2010 - Vanni Preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections இம் மூலத்தில் இருந்து 13 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035435/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Vanni_pref_GE2010.pdf.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 25 September 2020.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020.
- 1962 பிறப்புகள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 13வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை உரோமன் கத்தோலிக்கர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
- வாழும் நபர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- மன்னார் மாவட்ட நபர்கள்