அ. அரவிந்தகுமார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருணாசலம் அரவிந்தகுமார்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஆகத்து 2020
தொகுதிபதுளை மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதிபதுளை மாவட்டம்
ஊவா மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
2004–2014
தொகுதிபதுளை மாவட்டம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு17 நவம்பர் 1954 (1954-11-17) (அகவை 70)
தேசியம்இலங்கையர், மலையகத் தமிழர்
அரசியல் கட்சிமலையக மக்கள் முன்னணி
பிற அரசியல்
தொடர்புகள்
தமிழ் முற்போக்குக் கூட்டணி
வாழிடம்(s)பதுலுப்பிட்டி வீதி, பதுளை
வேலைஅரசியல்வாதி

அருணாசலம் அரவிந்தகுமார் (பிறப்பு: 17 நவம்பர் 1954)[1] இலங்கையின் மலையக அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் பொருளாளரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

அரவிந்தகுமார் கம்பளை புனித யோசேப்பு கல்லூரியிலும், கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[2]

அரசியலில்

அரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினராவார். அக்கட்சியின் நிதிச்செயலாளராகப் பணியாற்றினார்.[3][4] 2015 சூன் மாதத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உபதலைவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[5]

இவர் 2004 மாகாணசபைத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 5,059 வாக்குகள் பெற்று ஊவா மாகாணசபையின் உறுப்பினராக 2004 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.[6] 2009 மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8][9] 2015 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 53,741 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10][11][12][13]

2020 தேர்தலில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு 45,491 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[14][15]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2004 மாகாணசபை[6] பதுளை மாவட்டம் மமமு மமமு தெரிவானார்
2009 மாகாணசபை[7] பதுளை மாவட்டம் மமமு மமமு தெரிவானார்
2010 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் மமமு மமமு தெரிவு
செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்[16] பதுளை மாவட்டம் மமமு ஐதேக தெரிவானார்
2020 நாடாளுமன்றம் பதுளை மாவட்டம் மமமு ஐதேக தெரிவானார்

மேற்கோள்கள்

  1. "Directory of Members: A. Aravindh Kumar". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3266. 
  2. "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015. 
  3. "Rathakrishnan elected as Leader of Upcountry People's Front". Tamil Diplomat. 10 செப்டம்பர் 2015. http://tamildiplomat.com/rathakrishnan-elected-as-leader-of-upcountry-peoples-front/. 
  4. Kithsiri, Piyal (20 மார்ச் 2013). "Nearly 3,000 estate workers denied EPF and ETF". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304094158/http://www.ceylontoday.lk/51-27565-news-detail-nearly-3000-estate-workers-denied-epf-and-etf.html. 
  5. "Tamil Progressive Alliance elects working committee". Eye Sri Lanka. 5 சூன் 2015. http://www.eyesrilanka.com/2015/06/05/tamil-progressive-alliance-elects-working-committee/. 
  6. 6.0 6.1 "Results of Provincial Council Elections 2004". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090107101529/http://www.slelections.gov.lk/pdf/2004Provincial.pdf. 
  7. 7.0 7.1 "Preferences Badulla". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091210031151/http://www.slelections.gov.lk/pdf/PrefBadulla2009.pdf. 
  8. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1643/07. 2 March 2010. http://www.documents.gov.lk/Extgzt/2010/PDF/Mar/1643_7/1643_7(E).pdf. பார்த்த நாள்: 13 செப்டம்பர் 2015. 
  9. "Parliamentary General Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100414131621/http://www.slelections.gov.lk/parliamentary_elections/BADULLA.html. 
  10. "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. 
  11. "Preferential Votes". டெய்லிநியூஸ். 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2. 
  12. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  13. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  14. "General Election 2020: Preferential votes of Badulla District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027090934/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-badulla-district. பார்த்த நாள்: 17 September 2020. 
  15. Jayakody, Pradeep (28 ஆகத்து 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". டெய்லிமிரர். http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. 
"https://tamilar.wiki/index.php?title=அ._அரவிந்தகுமார்&oldid=24145" இருந்து மீள்விக்கப்பட்டது