பிமல் இரத்நாயக்க
பிமல் ரத்நாயக்க Bimal Rathnayaka | |
---|---|
இலங்கை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் செப்டம்பர் 2015 | |
முன்னையவர் | சரத்சந்திர மாயாதுன்ன |
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2001–2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | மக்கள் விடுதலை முன்னணி |
பிமல் நிரோசன் இரத்நாயக்க வீரக்கூன் (Bimal Nirsohan Rathnayake Weerakoon) இலங்கை இடதுசாரி அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
இவர் மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் உறுப்பினர் ஆவார்.[2] சோசலிச இளைஞர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தவர்.[1] 2014 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை முன்னணியின் தெசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[1]
இரத்நாயக்க முதன் முதலாக மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக 2001 நாடாளுமன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு 4,240 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] பின்னர் 2004 தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிட்டு 116,736 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4]
2010, 2015 தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளராக கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் சரத்சந்திர மாயாதுன்ன தனது பதவியைத் துறந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக பிமல் இரத்நாயக்க தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 "JVP bypasses Lalkantha, appoints Bimal NL MP". தி ஐலண்டு. 5 செப்டம்பர் 2015. http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=131174. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Bimal had discussions with Korean Labour Party. lankatruth.com 2011. Retrieved 7 July 2011.
- ↑ "General Election 2001 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015155/http://www.slelections.gov.lk/pdf/preference2001GE.pdf.
- ↑ "General Election 2004 Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.