தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் (National List Member of Parliament) என்பவர் இலங்கை நாடாளுமன்றத்துக்கு அரசியல் கட்சி ஒன்றினால் அல்லது சுயேட்சைக் குழு ஒன்றினால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஆவார். ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்படும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் எண்ணிக்கை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைக் கொண்டு தீர்மானிக்கப்படும். 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு 29 தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள். மீதமான 196 பேரும் நேரடியாக 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து மக்களால் தேர்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் ஆவார்.

நோக்கம்

நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ள, தன்னுடைய வாழ்நாட்களை கல்வி அறிவைப் பெறுவதற்காக செலவு செய்த, ஆனால் அரசியல் பின்னணியோ அனுபவமோ அல்லது தேர்தல் ஒன்றின் போது மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான அடிப்படையோ அல்லது வலையமைப்போ இல்லாத தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், மற்றும் பல்துறைகளில் உள்ளவர்களுக்கும் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் வாய்ப்பை வழங்கி, அதன் மூலம் அவர்களுடைய அறிவின் பயனை மக்கள் அடையச் செய்வதற்காகவே தேசியப் பட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]

தேசியப் பட்டியலுக்கான தமது தெரிவுப் பட்டியலை கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்கள் தேர்தலுக்கு முன்பாகவே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு சமர்ப்பித்தாலும், நடைமுறையில் பெரும்பாலான கட்சிகள் மாவட்ட அளவில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த வேட்பாளர்களைத் தமக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கின்றன. இலங்கையில், தேசியப் பட்டியலுக்கான பரிந்துரைகள் ஒரு 'திறந்த பட்டியல்' என்று அழைக்கப்படுகின்றன, இது கட்சிகள் அல்லது குழுக்கள் தேர்தலுக்குப் பிறகும் முன்வைக்கப்பட்ட பெயர்களை மாற்ற அனுமதிக்கிறது.[1]

தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் சிலர்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 Parliamentary Elections And How It Works, ROAR Media, 04-08-2020

வார்ப்புரு:Electoral districts of Sri Lanka