அங்கஜன் இராமநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அங்கஜன் ராமநாதன்
இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
20 ஆகத்து 2020
முன்னவர் செல்வம் அடைக்கலநாதன்
வேளாண்மைத் துறைத் துணை அமைச்சர்
பதவியில்
1 நவம்பர் 2018 – 15 திசம்பர் 2018
பதவியில்
12 சூன் 2018 – 26 அக்டோபர் 2018
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி யாழ்ப்பாண மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதி தேசியப் பட்டியல்
வட மாகாண சபை உறுப்பினர்
பதவியில்
2013–2015
பின்வந்தவர் அகிலதாஸ் சிவக்கொழுந்து
தொகுதி யாழ்ப்பாண மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு 9 சூலை 1983 (1983-07-09) (அகவை 41)
அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு

அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan; பிறப்பு: 9 சூலை 1983) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினரும், யாழ் மாவட்டக் கட்சித் தலைவரும் ஆவார்.[2][3] இவர் தற்போது இலங்கை நாடாளுமன்றக் குழுக்களின் துணைத்தலைவராகவும்,[4] யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராகவும் உள்ளார். இவர் முன்னர் பிரதி வேளாண்மை விவசாய அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் இருந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

அங்கஜன் இராமநாதன் 1983 சூலை 9 இல்[1] சதாசிவம் இராமநாதன் என்பவருக்குப் பிறந்தவர். தந்தை சதாசிவம் இராமநாதன் முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்சவின் நெருங்கிய சகாவாக இருந்தவர்.[5] சதாசிவம் ஈழப்போர்க் காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளை அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு பெரும் பொருள் ஈட்டியவர்.[6][7]

அங்கஜன் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி, கொழும்பு புனித தோமையர் ஆரம்பப் பாடசாலை, கொழும்பு பன்னாட்டுப் பாடசாலையிலும், பின்னர் சிங்கப்பூரிலும் படித்தார்.[8][9] இவர் ஆத்திரேலியாவில் கணினிப் பொறியியலில் இளநிலைப் பட்டமும், முதுகலை வணிக மேலாண்மைப் பட்டமும் பெற்றார்.[8][9]

அங்கஜன் பிரசாந்தினி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு பிள்ளை உள்ளது.[9]

அரசியலில்

இராமநாதன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வேட்பாளராக 2010 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு 3,461 விருப்பு வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[10] தேர்தல் காலத்தில் இராமநாதனும் அவரது ஆதரவாளர்களும் ஈபிடிபி துணை இராணுவக் குழுவினால் தாக்கப்பட்டனர்.[11] இதற்கு அடுத்த நாள் இராமநாதனின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகர முதல்வர் யோகேசுவரி பற்குணராஜா மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர், ஆனாலும் அவர் காயமடையவில்லை.[12] 2010 ஆகத்து மாதத்தில் இராமநாதன் இலங்கை சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.[13]

இராமநாதன் 2013 மாகாணசபைத் தேர்தலில் வடமாகாணத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.[14][15]

2015 நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். ஆனாலும், அவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றம் சென்றார்.[16][17] 2018 சூன் 12 இல் இவர் சிறிசேன அமைச்சரவையில் துணை விவசாய அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது இவர் தனது பதவியை இழந்தார். ஆனாலும், 2018 அக்டோபரில் மீண்டும் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[21][22][23] 2018 திசம்பரில் நெருக்கடி முடிவடைந்ததை அடுத்து பதவி இழந்தார்.

அங்கஜன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.[24][25][26] இவர் தனது தேர்தல் பரப்புரைகளுக்கு முகநூல் விளம்பரங்களுக்காக US$15,000 (ரூ.2.7 மில்லியன்) செலவழித்ததாகவும், இவரது மாமனார் எஸ். வின்சேந்திரராஜனின் கெப்பிட்டல் எஃப்.எம் வானொலி ஊடாகப் பெரும் பரப்புரைகளிலும் ஈடுபட்டார் எனவும் கூறப்பட்டது.[27][28][29][30][31]

தேர்தல் வெற்றியில் பின்னர் அங்கஜன் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டார்.[32][33] அங்கஜன் இப்பதவியைக் கையேற்ற முதலாவது நாள் "மாவட்டத்தின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தனது ஒப்புதல் பெறப்பட வேண்டும் என உத்தரவிட்டதுடன், தனது பிரதிநிதியாகவும், மாவட்ட அபிவிருத்திப் பேரவையின் அதிகாரியாகத் தனது தந்தையை நியமித்தார்.[34][35] 2020 ஆகத்து 20 இல் புதிய நாடாளுமன்றம் கூடியபோது அங்கஜன் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[36][37]

தேர்தல் வரலாறு

அங்கஜன் இராமநாதனின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2010 நாடாளுமன்றம்[10] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை
2013 மாகாணசபை[15] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு
2015 நாடாளுமன்றம் யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[38] யாழ்ப்பாண மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Angajan Ramanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3275. பார்த்த நாள்: 16 September 2020. 
  2. Balachandran, P. K. (22 ஆகத்து 2015). "SL President Sirisena Gains Control Over Parliament And Party". The New Indian Express. http://www.newindianexpress.com/world/SL-President-Sirisena-Gains-Control-Over-Parliament-And-Party/2015/08/22/article2986881.ece1. பார்த்த நாள்: 1 செப்டம்பர் 2015. 
  3. "Sirisena expands his Cabinet, inducts Tamil from Jaffna". United News of India. 12-06-2018. http://www.uniindia.com/sirisena-expands-his-cabinet-inducts-tamil-from-jaffna/world/news/1259124.html. பார்த்த நாள்: 22-06-2018. 
  4. "Handbook of Parliament: Deputy Chairpersons of Committees". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/deputy-chairpersons-of-committees. பார்த்த நாள்: 16 September 2020. 
  5. ரத்னஜீவன் ஹூல் (14 செப்டம்பர் 2013). "The Collapsing Den of Thieves". Sri Lanka Guardian. http://www.srilankaguardian.org/2013/09/the-collapsing-den-of-thieves.html. 
  6. "Big time racket of former a human smuggler and a paramilitary leader". Sri Lanka Guardian. 23 சனவரி 2012. http://www.srilankaguardian.org/2012/01/big-time-racket-of-former-human.html. 
  7. Jayadevan, Rajasingham (9 செப்டம்பர் 2013). "Inevitable TNA victory". Sri Lanka Guardian இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924102621/http://www.slguardian.org/inevitable-tna-victory/. 
  8. 8.0 8.1 Wijedasa, Namini (1 November 2012). "Jaffna: Development Without Trust". Colombo Telegraph. https://www.colombotelegraph.com/index.php/jaffna-development-without-trust/. பார்த்த நாள்: 16 September 2020. 
  9. 9.0 9.1 9.2 Jayawardane, Ishara (28 January 2016). "Master of his fate". Daily News (Colombo, Sri Lanka). http://www.dailynews.lk/2016/01/28/features/master-his-fate. பார்த்த நாள்: 16 September 2020. 
  10. 10.0 10.1 "Parliamentary General Election - 2010 Jaffna Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513035254/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Jaffna_pref_GE2010.pdf. 
  11. "SLFP candidate attacked in Jaffna". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31469. 
  12. "Ruling UPFA Mayor of Jaffna reports of an attempt on her life". தமிழ்நெட். 1 ஏப்ரல் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31473. 
  13. "Rajapaksa appoints new SLFP organizer to North". தமிழ்நெட். 22 ஆகத்து 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32465. 
  14. "PART I : SECTION (I) ó GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Northern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1829/33. 25 September 2013. http://www.documents.gov.lk/Extgzt/2013/PDF/Sep/1829_33/PG%201763%20%28E%29%20%20I-%201%20%20%28P.C%29.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  15. 15.0 15.1 "PROVINCIAL COUNCIL ELECTIONS 2013 ñ Results and preferential votes: Northern Province". டெய்லிமிரர். 26 செப்டம்பர் 2013 இம் மூலத்தில் இருந்து 16 சனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140116012528/http://www.dailymirror.lk/news/infographics/36078-provincial-council-elections-2013--results-and-preferential-votes-northern-province.html. 
  16. "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PARLIAMENTARY ELECTION — 2015 Declaration under Article 99A of the Constitution". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1928/25. 21 August 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Aug/1928_25/1928_25%20E.pdf. பார்த்த நாள்: 6 செப்டம்பர் 2015. 
  17. "UPFA finalises National list". டெய்லிமிரர். 21 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/84379/upfa-finalises-national-list. 
  18. "Seven new State and Deputy Ministers appointed". Daily FT (Colombo, Sri Lanka). 13 June 2018. http://www.ft.lk/news/Seven-new-State-and-Deputy-Ministers-appointed/56-657110. பார்த்த நாள்: 16 September 2020. 
  19. "New State Ministers & Deputy Ministers sworn in". Daily News (Colombo, Sri Lanka). 13 June 2018. http://www.dailynews.lk/2018/06/13/political/153711/new-state-ministers-deputy-ministers-sworn. பார்த்த நாள்: 16 September 2020. 
  20. de Alwis, Nathasha (1 November 2018). "New ministers sworn in". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). https://www.newsfirst.lk/2018/11/01/new-minister-sworn-in/. பார்த்த நாள்: 16 September 2020. 
  21. Kuruwita, Rathindra; Ferdinando, Shamindra (2 November 2018). "More ministers sworn in". தி ஐலண்டு (Colombo, Sri Lanak) இம் மூலத்தில் இருந்து 2 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190102050530/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=193730. 
  22. "General Election 2020: Preferential votes of Jaffna District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027094033/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-jaffna-district. பார்த்த நாள்: 16 September 2020. 
  23. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 16 September 2020. 
  24. "Sri Lanka’s big Facebook spenders". Tamil Guardian. 4 August 2020. https://www.tamilguardian.com/content/sri-lanka%E2%80%99s-big-facebook-spenders. பார்த்த நாள்: 16 September 2020. 
  25. Rubatheesan, Sandran (16 August 2020). "US $ 10,000 media blitz helps SLFP earn unprecedented victory in Jaffna". Sunday Times (Colombo, Sri Lanka). http://www.sundaytimes.lk/200816/news/us-10000-media-blitz-helps-slfp-earn-unprecedented-victory-in-jaffna-412550.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  26. Ratnajeevan Hoole (1 August 2020). "The EDR: the lynchpin in clean elections". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/columns/The-EDR-the-lynchpin-in-clean-elections/4-703987. 
  27. Ratnajeevan Hoole (16 May 2020). "Right of Reply Dayasiri Jayasekara and SLFP/SLPP intimidate Election Commission". Daily FT (Colombo, Sri Lanka). http://www.ft.lk/news/Right-of-Reply-Dayasiri-Jayasekara-and-SLFP-SLPP-intimidate-Election-Commission/56-700282. 
  28. "Chathurika Sirisena In Frequency Scam: DG TRCSL Rushes To Allocate Frequencies To Sirisena’s Henchmen Illegally". Colombo Telegraph. 6 December 2018. https://www.colombotelegraph.com/index.php/chathurika-sirisena-in-frequency-scam-dg-trcsl-rushes-to-allocate-frequencies-to-sirisenas-henchmen-illegally/. பார்த்த நாள்: 16 September 2020. 
  29. Bandara, Kelum (13 August 2020). "newly sworn Cabinet: New MPs receive more executive authority in new government". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/print/front_page/newly-sworn-Cabinet:--New-MPs-receive-more-executive-authority-in-new-government/238-193734. பார்த்த நாள்: 16 September 2020. 
  30. "New Cabinet sworn in". Daily News (Colombo, Sri Lanka). 12 August 2020. http://www.dailynews.lk/2020/08/12/local/225683/new-cabinet-sworn. பார்த்த நாள்: 16 September 2020. 
  31. "No development projects should be carried out without his approval, says Jaffna DDC Co-Chair". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/news/no-development-projects-should-be-carried-out-without-his-approval-says-jaffna-ddc-co-chair-413583.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  32. "Angajan demands three rooms at Jaffna District Secretariat". Sunday Times (Colombo, Sri Lanka). 23 August 2020. http://www.sundaytimes.lk/200823/columns/shoora-council-dinner-deserted-by-slpp-muslim-mps-413538.html. பார்த்த நாள்: 16 September 2020. 
  33. "New Deputy Speaker apppointed". Daily News (Colombo, Sri Lanka). 20 August 2020. https://www.dailynews.lk/2020/08/20/local/226463/new-deputy-speaker-apppointed. பார்த்த நாள்: 16 September 2020. 
  34. "Angajan Ramanathan appointed Deputy Chairperson of Committees". Ceylon Today (Colombo, Sri Lanka). 20 August 2020 இம் மூலத்தில் இருந்து 26 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211026094655/https://ceylontoday.lk/news/angajan-ramanathan-appointed-deputy-chairperson-of-committees. பார்த்த நாள்: 16 September 2020. 
  35. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020. 
"https://tamilar.wiki/index.php?title=அங்கஜன்_இராமநாதன்&oldid=24374" இருந்து மீள்விக்கப்பட்டது