ருவான் விஜேவர்தன
ருவான் விஜேவர்தன Ruwan Wijewardene | |
---|---|
ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 14 செப்டம்பர் 2020 | |
முன்னவர் | சஜித் பிரேமதாச |
கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 22 ஏப்ரல் 2010 – 3 மார்ச் 2020 | |
பெரும்பான்மை | 157,932 |
பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் | |
பதவியில் 12 சனவரி 2015 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
வெகுசன ஊடக அமைச்சர்[1] | |
பதவியில் 22 பெப்ரவரி 2019 – 17 நவம்பர் 2019 | |
குடியரசுத் தலைவர் | மைத்திரிபால சிறிசேன |
பிரதமர் | ரணில் விக்கிரமசிங்க |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 4 ஆகத்து 1975 |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
பெற்றோர் | ரஞ்சித் விஜேவர்தன ரஞ்சனி (சேனநாயக்க) விஜேவர்தன |
இருப்பிடம் | கிரிலப்பனை, கொழும்பு |
படித்த கல்வி நிறுவனங்கள் | புனித தோமையர் பாடசாலை, கொழும்பு சசெக்சு பல்கலைக்கழகம் |
பணி | அரசியல் |
சமயம் | பௌத்தம் |
தினேந்திரா ருவான் விஜேவர்தன (Dinendra Ruwan Wijewardene, சிங்களம்: දිනෙන්ද්ර රුවන් විජෙවර්ධන, பிறப்பு: 4 ஆகத்து 1975) இலங்கை அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் பாதுகாப்பு இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[2] இவர் கம்பகா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் 2020 செப்டம்பர் 14 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4]
இவர் 2010 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்.[5] He was appointed as the acting minister of defence few times after 2019.[6][7]
வாழ்க்கைக் குறிப்பு
ருவான் விஜேவர்தன விஜய பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, ரஞ்சனி சேனநாயக்க ஆகியோரின் இளைய மகன் ஆவார். இவரது தாய்வழி பூட்டன் இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா ஆவர். இவரது தந்தை-வழி பாட்டனார் டி. ஆர். விஜயவர்தனா பிரபல பத்திரிகையாளர், ஏரிக்கரைப் பத்திரிகைக் குழுமப்த்தை ஆரம்பித்தவர். ருவான் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் மருமகனும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உச்டன்பிறவா சகோதரரும் ஆவார்.[8][9] இவர் இங்கிலாந்து, சசெக்சு பல்கலைக்க்ழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
அரசியலில்
விஜேவர்தன 2009 மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10] ஆனாலும், 2020 தேர்தலில் தோல்வியடைந்தார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][11][12][13][14][15]
மேற்கோள்கள்
- ↑ Ruwan Wijewardene appointed Non-Cabinet Minister of Media
- ↑ Ruwan Wijewardene appointed Mass Media non-cabinet Minister.
- ↑ Parliamentary Elections (2010) Electoral District No:- 02 - Gampaha.
- ↑ 4.0 4.1 Ruwan Wijewardene elected Deputy Leader of UNP. Daily Mirror (Sri Lanka), Retrieved on 14 September 2020.
- ↑ New Cabinet ministers sworn in.
- ↑ Ruwan Wijewardene appointed as Acting Defence Minister
- ↑ Ruwan appointed as Acting Defence Minister as President leaves for Britain
- ↑ Ruwan Wijewardene wants to revive UNP பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ “I’m more of a liberal democrat like Dudley” பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ රනිල්ගෙන් පස්සේ . Divaina (Sri Lanka), Retrieved on 5 May 2010.
- ↑ Ruwan Wijewardene elected UNP Deputy Leader, DailyFT, 14-09-2020
- ↑ Opinion: It’s Ruwan! – Wijewardene in line to lead the UNP, Lanka Business Online, 14-09-2020
- ↑ Ranil's focus on giving UNP leadership to Ruwan?. Sri Lanka Mirror, Retrieved on 8 August 2020.
- ↑ I am willing to lead UNP if party members want me to: Ruwan. The Daily Mirror (Sri Lanka), Retrieved on 11 August 2020.
- ↑ Ruwan willing to accept party leadership. The Daily Mirror (Sri Lanka), Retrieved on 27 August 2020.