தே. ம. சுவாமிநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
டி. எம். சுவாமிநாதன்
D. M. Swaminathan
D. M. Swaminathan.jpg
சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
11 நவம்பர் 2015
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
முன்னையவர்திலக் மாரப்பன
புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம், இந்து அலுவல்கள் அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியில்
12 சனவரி 2015
பிரதமர்ரணில் விக்கிரமசிங்க
இலங்கை மேல் மாகாண ஆளுநர்
பதவியில்
11 சூலை 1994 – 1 டிசம்பர் 1994
முன்னையவர்சுப்பையா சர்வானந்தா
பின்னவர்கே. விக்னராஜா
தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஐக்கிய தேசிய முன்னணி
துணைவர்காயத்ரி கார்த்திகேசன்
உறவுகள்சர் பொன்னம்பலம் அருணாசலம், சர் அருணாசலம் மகாதேவா, வி. மாணிக்கவாசகர், சிவா செல்லையா, சர் முத்து குமாரசுவாமி
பிள்ளைகள்சோபனா, பிரகாஷ்
வாழிடம்(s)125, ரொஸ்மீட் இடம்,
கொழும்பு 7, இலங்கை.
முன்னாள் கல்லூரிகொழும்பு றோயல் கல்லூரி

தேவ மனோகரன் சுவாமிநாதன் (Deva Manoharan Swaminathan) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும் ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான[1] இவர், இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக 2015 சனவரி 12 முதல் நியமிக்கப்பட்டார்.[2] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.[3] முன்னாள் மேல் மாகாண ஆளுநராகவும், தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராகவும் பணியாற்றினார்.

குடும்பமும், கல்வியும்

சுவாமிநாதன் வட இலங்கையில் புகழ் பெற்ற அரசியல் குடும்பத்தில் எம். சுவாமிநாதன், லலிதாம்பிகை ஆகியோருக்குப் பிறந்தவர். முன்னைநாள் மேலவை உறுப்பினர் சர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் இவரது தாய்வழிப் பாட்டனார் ஆவார். சேர் பொன்னம்பலம் அருணாசலம் தந்தை வழிப் பூட்டனார் ஆவார்.[4] கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்ற சுவாமிநாதன்,[4] இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் கற்று உச்சநீதிமன்ற சட்டவறிஞராக வெளியேறினார்.[4] சட்டக் கல்லூரியின் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.[4]

சட்டப் பணி

கொழும்பில் தனது சட்டவறிஞர் பணியை ஆரம்பித்த சுவாமிநாதன், 1971 இல் டி. எம். சுவாமிநாதன் அசோசியேட்சு என்ற சட்ட நிறுவனத்தை ஆரம்பித்தார்.[5]

அரசியலில்

அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனா, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான சுவாமிநாதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பொதுச் சேவைகள் ஆணையம், கல்விச் சேவைகள் குழு ஆகியவற்றில் உறுப்பினராக நியமித்தார். பின்னர் அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசாவின் கீழ் உள்ளூராட்சி சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றினார். 2002 இல் தேசிய சேமிப்பு வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.[6][7]

அரசுத்தலைவர் விஜயதுங்கா மேல்மாகாணசபை ஆளுனர் சுப்பையா சர்வானந்தாவை சர்ச்சைக்குரிய வகையில் பதவி நீக்கம் செய்ததை அடுத்து, அவரது இடத்துக்கு சூன் 2004 இல் சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார்.[8]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2015 சனவரி 12 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் இந்து மத விவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[2] மீண்டும் இவர் 2015 செப்டம்பர் 4 அன்று புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[9][10][11] 2015 நவம்பர் 11 முதல் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.[3]

சமூக சேவை

சுவாமிநாதன் கொழும்பு பொன்னம்பலவாணேசுவரர் கோயிலின் அறங்காவல் குழுத் தலைவராவார். இவர் கொழும்பு விவேகானந்த சபையின் நூற்றாண்டுத் தலைவராகவும் இருந்துள்ளார்.

மேற்கோள்கள்

  1. *Parliament profile
  2. 2.0 2.1 New Cabinet ministers sworn in, டெய்லிமிரர், சனவரி 12, 2015
  3. 3.0 3.1 "புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொறுப்பேற்றார்". பிபிசி. 11 நவம்பர் 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/11/151111_lankacabinet.shtml. பார்த்த நாள்: 11 நவம்பர் 2015. 
  4. 4.0 4.1 4.2 4.3 "Partner". D. M. Swaminathan Associates இம் மூலத்தில் இருந்து 2014-04-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140403114046/http://www.dmswaminathan-associates.com/web/index.php/our-people/lawyers/partner. 
  5. "About Us". D. M. Swaminathan Associates இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304224629/http://dmswaminathan-associates.com/web/index.php/about-us. 
  6. "Swaminathan, NSB chairman". தி ஐலண்டு. 21 மார்ச் 2002 இம் மூலத்தில் இருந்து 2015-09-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150918232807/http://www.island.lk/2002/03/21/busine07.html. 
  7. Sirimanna, Bandula (27 மே 2012). "NSB-TFC share deal cannot be justified whatsoever, says former NSB chairman". சண்டே டைம்சு. http://www.sundaytimes.lk/120527/BusinessTimes/bt14.html. 
  8. "A Shabby Abuse of Power". Tamil Times XIII (6): 3. 15 சூன் 1994. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488. http://noolaham.net/project/34/3382/3382.pdf. 
  9. "இலங்கையின் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது". பிபிசி தமிழ். 4 செப்டம்பர் 2015. http://www.bbc.com/tamil/sri_lanka/2015/09/150904_srilanka_cabinet. பார்த்த நாள்: 4 செப்டம்பர் 2015. 
  10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-12-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20031204130931/http://www.priu.gov.lk/Govt_Ministers/Indexministers.html. 
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2015-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150906144228/http://www.news.lk/news/sri-lanka/item/9565-new-ministers-sworn-in. 
"https://tamilar.wiki/index.php?title=தே._ம._சுவாமிநாதன்&oldid=24424" இருந்து மீள்விக்கப்பட்டது