சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சேர்
எஸ். பரராஜசிங்கம்
S. Pararajasingam
இலங்கை செனட் சபை உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு (1896-06-25)25 சூன் 1896
தேசியம் இலங்கைத் தமிழர்
படித்த கல்வி நிறுவனங்கள் கல்கிசை புனித தோமையர் கல்லூரி
உவெசுலி கல்லூரி, கொழும்பு

சேர் சங்கரப்பிள்ளை பரராஜசிங்கம் (Sangarapillai Pararajasingam, பி25 சூன் 1896 - ) மூதவை உறுப்பினராகவும் இருந்தவர்.

இளமைக் காலம்

பரராஜசிங்கம் 1896 சூன் 25 இல் ஏ. வி. சங்கரப்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] தந்தை மானிப்பாய் இந்துக் கல்லூரியை நிறுவியவர்..[1] பரராஜசிங்கம் கொழும்பு கல்கிசையில் உள்ள புனித தோமையர் கல்லூரியிலும், பின்னர் உவெசுலி கல்லூரியிலும் கல்வி கற்றார்.[1] இவர் சேர் பொன். அருணாசலத்தின் மகள் பத்மாவதி என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]

பணி

பரராஜசிங்கம் வோல்கார்ட் பிறதர்சு நிறுவனத்தின் தரகராகப் பணியாற்றினார்.[1] இவர் முதலீட்டாளர்கள் சபையின் தலைவராகவும், விவசாய, தொழிற்சாலை கடன் வழங்குவோர் திணைக்களம், இலங்கை தென்னை சபை, இலங்கை அறிவியல், தொழிற்துறை ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் இயக்குனர் குழும உறுப்பினராகவும் இருந்தார்.[1]

பிற்கால வாழ்க்கை

பரராஜசிங்கம் 1954 ஆம் ஆண்டில் இலங்கை செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[1] இலங்கையின் வேளாண்மைத் துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 1955 ஆம் ஆண்டில் சேர் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்