எம். எஸ். தௌஃபீக்
எம். எஸ். தௌஃபீக் M. S. Thowfeek நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
உள்நாட்டுப் போக்குவரத்துத்துறை பிரதி அமைச்சர் | |
பதவியில் 21 சனவரி 2015 – 17 ஆகத்து 2015 | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பதவியில் சனவரி 2016 – மார்ச் 2020 | |
முன்னவர் | ஏ. ஆர். ஏ. அபீசு |
தொகுதி | தேசியப் பட்டியல் |
பதவியில் 2010 – ஆகத்து 2015 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
பதவியில் 2001–2004 | |
தொகுதி | தேசியப் பட்டியல் |
பதவியில் 2000–2001 | |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2008–2010 | |
பின்வந்தவர் | ஏ. ஆர். முகமது |
தொகுதி | திருகோணமலை மாவட்டம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | முகமது சரீப் தௌபீக் 7 சனவரி 1971 |
அரசியல் கட்சி | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு |
பிற அரசியல் சார்புகள் |
ஐக்கிய மக்கள் சக்தி |
முகம்மது சரிப் தௌஃபீக் (Mohamed Shariff Thowfeek, பிறப்பு: 7 சனவரி 1971)[1] இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை அமைச்சரும் ஆவார்.
அரசியல் பணி
தௌஃபீக் 2000 நாடாளுமன்றத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு சார்பில் மக்கள் கூட்டணி வேட்பாளராக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு, தெரிவு செய்யப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[2] முஸ்லிம் காங்கிரசு கட்சிக்கும் மக்கள் கூட்டணிக்குமிடையேயான கூட்டு ஒப்பந்தம் 2001 சூன் மாதத்தில் முறிவடைந்தது. 2001 அக்டோபரில் முசுலிம் காங்கிரசு எதிர்க்கட்சிக் கூட்டணியான ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது.[3][4][5][6] தௌஃபீக் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] ஆனாலும், இவர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார்.[8][9] 2004 தேர்தலில் முசுலிம் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு கட்சிப் பட்டியலில் மூன்றாவதாக வந்து, தெரிவு செய்யப்படவில்லை.[10]
பின்னர், தௌஃபீக் 2008 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டார்.[11] மீண்டும் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[12] இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் 2015 சனவரியில் உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13][14][15]
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தௌஃபீக் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக திருகோணமலையில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[16][17] ஆனாலும், 2016 சனவரியில் முசுலிம் காங்கிரசு உறுப்பினர் ஏ. ஏர். ஏ. ஹபீசு தனது தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவியைத் துறந்ததை அடுத்து தௌஃபீக் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[18][19][20] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் முசுலிம் காங்கிரசு சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[21][22]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2000 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | மக்கள் கூட்டணி | தெரிவு | |||
2001 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2004 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | தெரிவு செய்யப்படவில்லை | ||||
2008 மாகாணசபை | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு | |||
2010 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம் | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய தேசிய முன்னணி | தெரிவு செய்யப்படவில்லை | |||
2020 நாடாளுமன்றம்[23] | திருகோணமலை மாவட்டம் | சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு | ஐக்கிய மக்கள் சக்தி | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: M.S. Thowfeek". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/102.
- ↑ "General Election 2000 Preferences". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115732/http://www.slelections.gov.lk/pdf/preference2000GE.PDF.
- ↑ Farook, Latheef (23 December 2014). "SLMC: Liability on the Muslim community". டெய்லி எஃப்டி இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924043125/http://www.ft.lk/2014/12/23/slmc-liability-on-the-muslim-community/.
- ↑ Satyapalan, Franklin R. (21 June 2001). "SLMC-NUA quit PA coalition". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 3 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303195512/http://www.island.lk/2001/06/21/news02.html.
- ↑ "Sri Lanka govt. faces collapse as Muslims leave". தமிழ்நெட். 20 June 2001. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6089.
- ↑ "UNP to contest as UNF with elephant symbol". தமிழ்நெட். 21 October 2001. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6403.
- ↑ Ferdinando, Shamindra (28 July 2002). "The voters could not keep some lucky guys out of parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 29 மார்ச் 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030329212035/https://island.lk/2002/07/28/featur03.html.
- ↑ "National List MPs". டெய்லி நியூசு. 12 December 2001. http://archives.dailynews.lk/2001/12/12/pol02.html.
- ↑ "SLMC submits National List". தி ஐலண்டு. 12 December 2001 இம் மூலத்தில் இருந்து 22 மே 2003 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030522065646/http://origin.island.lk/2001/12/12/news07.html.
- ↑ "General Election 2004 Preferences". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2010-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100304015514/http://www.slelections.gov.lk/pdf/Preference2004GE.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications PROVINCIAL COUNCILS ELECTIONS ACT, No. 2 OF 1988 Eastern Province Provincial Council". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1549/17. 15 May 2008. http://www.documents.gov.lk/Extgzt/2008/pdf/May/1549_17/1549_17E.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016.
- ↑ "Parliamentary General Election - 2010 Trincomalee Preferences". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513034918/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Trincomalee_pref_GE2010.pdf.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1898/70. 23 January 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jan/1898_70/1898_70%20%28E%29.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016.
- ↑ "Ranjan Social Services Dy Minister". டெய்லிமிரர். 21 January 2015. http://www.dailymirror.lk/61819/rtu.
- ↑ "More new ministers sworn in". த நேசன். 21 January 2015 இம் மூலத்தில் இருந்து 28 ஜனவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150128140802/http://www.nation.lk/edition/breaking-news/item/37574-more-new-ministers-sworn-in.html.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Notice Under Section 24(1) GENERAL ELECTIONS OF MEMBERS OF THE PARLIAMENT". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1923/03. 13 July 2015. http://www.documents.gov.lk/Extgzt/2015/PDF/Jul/1923_03/1923_03E.pdf. பார்த்த நாள்: 30 ஜனவரி 2016.
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லிமிரர். 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "PART I : SECTION (I) — GENERAL Government Notifications THE PARLIAMENTARY ELECTIONS ACT, No. 1 OF 1981 Filling of a vacancy under Section 64 (5)". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1950/50. 22 January 2016. http://www.documents.gov.lk/Extgzt/2016/PDF/Jan/1950_50/G%2022916%20%20E.pdf.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Thowfeek sworn in as MP". டெய்லிமிரர். 26 January 2016. http://www.dailymirror.lk/104243/thowfeek-sworn.
- ↑ "M.S Thowfeek takes oath as MP". டெய்லிநியூசு. 26 January 2016. http://www.dailynews.lk/?q=2016/01/26/local/ms-thowfeek-takes-oath-mp.
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Trincomalee District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200924220408/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-trincomalee-district. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020.
- 1971 பிறப்புகள்
- இலங்கையின் துணை அமைச்சர்கள்
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 11வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 12வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 14வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்
- திருகோணமலை மாவட்ட நபர்கள்
- இலங்கை முசுலிம் அரசியல்வாதிகள்
- இலங்கை முசுலிம்கள்
- சிறீலங்கா முசுலிம் காங்கிரசு அரசியல்வாதிகள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள்