வேலுசாமி இராதாகிருஷ்ணன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வேலுசாமி இராதாகிருஷ்ணன்
Velusami Radhakrishnan
தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுது போக்கு அலுவல்கள் பிரதி அமைச்சர்
பதவியில்
9 அக்டோபர் 2014 – 10 டிசம்பர் 2014
இலங்கை நாடாளுமன்றம்
for நுவரெலியா மாவட்டம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
மத்திய மாகாணசபை உறுப்பினர்
பதவியில்
1999–2010
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 ஆகத்து 1952 (1952-08-01) (அகவை 72)
அரசியல் கட்சிமலையக மக்கள் முன்னணி
இனம்மலையகத் தமிழர்

அகண்டன் வேலுசாமி இராதாகிருஷ்ணன் (Akandhan Velusami Radhakrishnan, பிறப்பு: 1 ஆகத்து 1952)[1] இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்

இராதாகிருஷ்ணன் 1952 ஆகத்து 1 ஆம் நாள் நுவரெலியா மாவட்டம், பொகவந்தலாவையில் உள்ள இராணிகாடு தோட்டத்தில் பிறந்து கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தில் வளர்ந்தார். நுவரெலியா புனித திரித்துவக் கல்லூரி, கொழும்பு சென் பீட்டர்சு கல்லூரி, யோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.[2] திருமணமான இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.[1][2]

அரசியலில்

இராதாகிருஷ்ணன் 1991 இல் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நுவரெலியா பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டு அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.[2] 1999 இல் மத்திய மாகாணசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கலாசார மற்றும் தமிழ்க் கல்விக்கான மாகாணசபை அமைச்சரானார்.[3][4] 2004 மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மீண்டும் மாகாணசபை உறுப்பினரானார்.[5][6] 2009 மாகாணாசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுக) வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7] 2009 மார்ச்சில் மாகாணசபை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8]

2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐமசுக வேட்பாளராக நுவரெலியாவில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[9][10] 2010 செப்டம்பர் 11 இல் இராதாகிருஷ்ணன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக ஐமசுக விற்கு ஆதரவளித்தார்.[11] 2010 அக்டோபர் 7 இல் மலையக மக்கள் முன்னணியில் சேர்ந்து அதன் அரசியல் பிரிவுத் தலைவரானார்.[12] 2014 அக்டோபர் 9 இல் தாவரவியல் பூங்காக்கள் பொது பொழுது போக்கு அலுவல்கள் பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[13][14]

2014 டிசம்பர் 10 இல் ஐமசுக அரசில் இருந்து விலகிய இராதாகிருஷ்ணன் 2015 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்ட எதிரணியின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார்.[15][16] தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசுத்தலைவராகத் தெரிவான சிரிசேன இவரைக் கல்வி இராசாங்க அமைச்சராக நியமித்தார்.[17][18]

2015 ஆம் ஆண்டில் இராதாகிருஷ்ணன் சனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோருடன் இணைந்து தமிழ் முற்போக்குக் கூட்டணி என்ற கூட்டமைப்பை ஆரம்பித்தார்.[19][20] இக்கூட்டணி 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறது.[21]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Radhakrishnan, V.S.". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3153. 
  2. 2.0 2.1 2.2 2.3 "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf. 
  3. "'Tamils should preserve their culture'". டெய்லிநியூஸ். 8 பெப்ரவரி 2002. http://archives.dailynews.lk/2002/02/08/new29.html. 
  4. Krishnaswamy, P. (15 செப்டம்பர் 2013). "Heavy voter turnout expected in upcountry". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924133649/http://www.sundayobserver.lk/2013/09/15/pol09.asp. 
  5. "Results of Provincial Council Elections 2004". இலங்கை தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2009-01-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090107101529/http://www.slelections.gov.lk/pdf/2004Provincial.pdf. 
  6. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments &c., by the Governors APPOINTMENTS MADE BY THE HON. GOVERNOR – CENTRAL PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1380/02. 14 February 2005. http://documents.gov.lk/Extgzt/2005/pdf/Feb/1380-2/1380%20-%202%20E.pdf. பார்த்த நாள்: 31 டிசம்பர் 2014. 
  7. "Preferences Nuwara Eliya". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2009-12-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091210040252/http://www.slelections.gov.lk/Provincial/2009/Central/district/neliyapref.pdf. 
  8. "PART IV (A) — PROVINCIAL COUNCILS Appointments &c., by the Governors APPOINTMENTS MADE BY THE GOVERNOR OF THE CENTRAL PROVINCE". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1594/28. 26 March 2009. http://documents.gov.lk/Extgzt/2009/PDF/Mar/1594_28/PG%209011%20%28E%29.pdf. பார்த்த நாள்: 31 டிசம்பர் 2014. 
  9. "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513034353/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Nuwara%20Eliya_pref_GE2010.pdf. 
  10. "General Elections 2010 - Preferential Votes". சண்டேடைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf. 
  11. "CWC MP Goes Independent". த சண்டே லீடர். 11 செப்டம்பர் 2010 இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617030116/http://www.thesundayleader.lk/2010/09/11/cwc-mp-goes-independent/. 
  12. "Parliamentarian Radhakrishnan to lead UPF political wing". தமிழ்நெட். 8 அக்டோபர் 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=32757. 
  13. "Radhakrishnan appointed deputy minister". டெய்லிமிரர். 10 அக்டோபர் 2014. http://www.dailymirror.lk/53561/radhakrishnan-appointed-deputy-minister. 
  14. "PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President". இலங்கை அரச வர்த்தமானி Extraordinary 1884/24. 14 October 2014. http://documents.gov.lk/Extgzt/2014/PDF/Oct/1884_24/G20397-E.pdf. பார்த்த நாள்: 31 டிசம்பர் 2014. 
  15. Ferdinando, Shamindra (11 டிசம்பர் 2014). "Two deputy ministers quit; CWC suffers split". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2014-12-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141213153721/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=115736. 
  16. Srinivasan, Meera (11 டிசம்பர் 2014). "2 more MPs leave Rajapaksa government". தி இந்து. http://www.thehindu.com/news/international/south-asia/2-more-mps-leave-rajapaksa-government/article6680195.ece. 
  17. "New Cabinet ministers sworn in". டெய்லிமிரர். 12 சனவரி 2015. http://www.dailymirror.lk/61073/new-cabinet-ministers-sworn-in. 
  18. "New Cabinet takes oaths". நேசன். 12 சனவரி 2015 இம் மூலத்தில் இருந்து 2015-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150118145912/http://www.nation.lk/edition/latest-top-stories/item/37306-new-cabinet-takes-oaths.html. 
  19. "DPF, UPF, WNC form new political alliance". டெய்லி மிரர். 3 சூன் 2015. http://www.dailymirror.lk/74919/dpf-upf-wnc-form-new-political-alliance. பார்த்த நாள்: 4 சூன் 2015. 
  20. "மனோ கணேசன் தலைமையில் இன்று உதயமானது தமிழ் முற்போக்கு கூட்டணி!". தமிழ்வின். 3 சூன் 2015 இம் மூலத்தில் இருந்து 2015-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150706122102/http://www.tamilwin.com/show-RUmtyGTXSUgs1H.html. பார்த்த நாள்: 4 சூன் 2015. 
  21. "த.மு.கூ - ஐ.தே.க இணைந்து போட்டி". அததெரண. 10 சூலை 2015. http://tamil.adaderana.lk/news/70578/%E0%AE%A4.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95%E0%AF%82---%E0%AE%90.%E0%AE%A4%E0%AF%87.%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF. பார்த்த நாள்: 12 சூலை 2015.