கம்பகா தேர்தல் மாவட்டம்
கம்பகா தேர்தல் மாவட்டம் (Gampaha electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மேல் மாகாணத்தின் கம்பகா நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 18 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 1,474,464 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]
கம்பகா இலங்கைத் தேர்தல் மாவட்டம் | |
மாகாணம் | மேற்கு |
நிருவாக மாவட்டங்கள் |
கம்பகா |
தேர்தல் தொகுதிகள் |
13 |
வாக்காளர்கள் | 1,474,464[1] (2010) |
மக்கள்தொகை | 2,152,000[2] (2008) |
பரப்பளவு | 1,387 கிமீ2[3] |
உறுப்பினர்களின் எண்ணிக்கை |
18 |
உறுப்பினர்கள் | லசந்த அழகியவன்ன, ஐமசுகூ ஜோன் அமரதுங்க, ஐதேமு சி. பி. டி. பண்டாரநாயக்க, ஐமசுகூ சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, ஐமசுகூ சரத் குமார குணரத்ன, ஐமசுகூ சரண குணவர்தன, ஐமசுகூ விஜித ஹேரத், சதேகூ கரு ஜயசூரிய, ஐக்கிய தேசிய முன்னணி ஜயலத் ஜயவர்தன, ஐக்கிய தேசிய முன்னணி பிளிக்ஸ் பெரேரா, ஐமசுகூ பசில் ராஜபக்ச, ஐமசுகூ ருவான் ரணதுங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அதுரலிய ரதன தேரர், ஐமசுகூ வசந்த சேனநாயக்கா, ஐமசுகூ மேர்வின் சில்வா, ஐமசுகூ உப்பேக்சா சுவர்ணமாலி, ஐதேமு ருவான் விஜேவர்தன, ஐதேமு துலிப் விஜேசேகர, ஐமசுகூ |
தேர்தல் தொகுதிகள்
கம்பகா தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:
- அத்தனகலை தேர்தல் தொகுதி
- பியகமை தேர்தல் தொகுதி
- திவுலப்பிட்டி தேர்தல் தொகுதி
- தொம்பே தேர்தல் தொகுதி
- கம்பகா தேர்தல் தொகுதி
- ஜா-எல தேர்தல் தொகுதி
- கட்டான தேர்தல் தொகுதி
- களனி தேர்தல் தொகுதி
- மகர தேர்தல் தொகுதி
- மினுவாங்கொடை தேர்தல் தொகுதி
- மிரிகமை தேர்தல் தொகுதி
- நீர்கொழும்பு தேர்தல் தொகுதி
- வத்தளை தேர்தல் தொகுதி
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-01-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100128001850/http://www.slelections.gov.lk/presidential2010/BADULLA.html.
- ↑ "Estimated mid year population by district, 2004 – 2008". Statistical Abstract 2009 (Department of Census and Statistics, Sri Lanka). http://www.statistics.gov.lk/abstract2009/chapters/Chap2/AB2-1-1.pdf.
- ↑ "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009 (Department of Census and Statistics, Sri Lanka). http://www.statistics.gov.lk/abstract2009/chapters/Chap1/AB1-1.pdf.