சிறீ ரங்கா ஜெயரத்தினம்
சிறீ ரங்கா ஜெயரத்தினம் Sri Ranga Jeyaratnam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for நுவரெலியா மாவட்டம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 22 சனவரி 1971 |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | பிரஜைகள் முன்னணி |
முன்னாள் கல்லூரி | கொழும்புப் பல்கலைக்கழகம் |
வேலை | ஊடகவியலாளர் |
சிறீ ரங்கா ஜெயரத்தினம் (Sri Ranga Jeyaratnam, பிறப்பு: 22 சனவரி 1971) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் ஊடகவியலாளரும் ஆவார். பிரஜைகள் முன்னணி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
சிறீ ரங்கா 1971 சனவரி 22 இல் வவுனியாவில் பிறந்தார்.[2] வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார்.[3] பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றார். பல்கலைக்கழகக் காற்பந்து அணியின் தலைவராக இருந்து செயற்பட்டார்.[4][5]
பணி
பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பின்னர் மகாராஜா நிறுவனத்தில் இணைந்து சக்தி ஏஃப். எம். வானொலியில் எரிமலை என்ற நிகழ்ச்சியை வழங்கி வந்தார்.[3] பின்னர் அவர் சக்தி தொலைக்காட்சியில் மின்னல் என்ற நிகழ்ச்சியை நடத்தினார்.[1][3] இந்நிகழ்ச்சி மலையகத் தமிழ் மக்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றது.[1]
அரசியலில்
சிறீ ரங்கா முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் குடும்பத்தினருடன், குறிப்பாக அவரது மகன் நாமல் ராசபக்சவுடன், மிக நெருக்கமாக இருந்து வந்தார்.'[6][7] 2005, 2006 காலப்பகுதியில், சிறீ ரங்காவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இனந்தெரியாத நபர்களிடமிருந்து பல முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.[8][9] 2006 நவம்பரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பான ஒரு நிகழ்ச்சியைப் படைத்த பின்னர், சிறீ ரங்காவின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறையினர் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.[10][11] 2010 பெப்ரவரி 3 இல் இவர் பயணம் செய்த வாகனம் ஒன்று அட்டனில் வைத்துத் தாக்கப்பட்டது.[12]
சிறீ ரங்கா 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[13][14]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 டி. பி. எஸ். ஜெயராஜ் (23 ஏப்ரல் 2010). "Decline of Tamil representation outside the North and East". dbsjeyaraj.com இம் மூலத்தில் இருந்து 2015-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150713175119/http://dbsjeyaraj.com/dbsj/archives/1446.
- ↑ "Directory of Members: Sri Ranga, J.". இலங்கை நாடாளுமன்றம். http://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/3162.
- ↑ 3.0 3.1 3.2 "New faces in Parliament". சண்டே டைம்சு. 18 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100418/News/page8.pdf.
- ↑ Mathiaparanam, Kajanka. "Colours Awarding Ceremony 2013". கொழும்பு பல்கலைக்கழகம் இம் மூலத்தில் இருந்து 2015-07-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150721124504/http://www.cmb.ac.lk/?p=1156.
- ↑ "UOC Colours Awards Ceremony At Water’s Edge". த சண்டே லீடர். 12 சூன் 2011 இம் மூலத்தில் இருந்து 2015-07-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150722044326/http://www.thesundayleader.lk/2011/06/12/uoc-colours-awards-ceremony-at-water%E2%80%99s-edge/.
- ↑ "'Minnal Ranga' tipped to cross over to Rajapaksa alliance". தமிழ்நெட். 7 மே 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31706.
- ↑ "07COLOMBO728, SRI LANKA: GSL COMPLICITY IN PARAMILITARY". விக்கிலீக்ஸ். 18 மே 2007. http://www.wikileaks.org/cable/2007/05/07COLOMBO728.html.
- ↑ "MTV journalist threatened". டெய்லி நியூஸ். 19 நவம்பர் 2005. http://archives.dailynews.lk/2005/11/19/news30.htm.
- ↑ Samarasinghe, Sonali (8 சனவரி 2006). "Maharaja assassination plot thickens". த சண்டே லீடர் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304072425/http://www.thesundayleader.lk/archive/20060108/spotlight.htm.
- ↑ "IFJ condemns death threats against a Shakthi TV journalist". தமிழ்நெட். 21 நவம்பர் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20351.
- ↑ "Threat to Sri Ranga’s life". தி ஐலண்டு. 17 நவம்பர் 2006 இம் மூலத்தில் இருந்து 2014-12-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141214203300/http://www.island.lk/2006/11/17/news8.html.
- ↑ "Tamil TV journalist attacked in Nuwara Eliya". தமிழ்நெட். 4 பெப்ரவரி 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31138.
- ↑ "Parliamentary General Election - 2010 Nuwara Eliya Preferences". இலங்கைத் தேர்தல் திணைக்களம் இம் மூலத்தில் இருந்து 2010-05-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100513034353/http://www.slelections.gov.lk/pdf/GE2010_preferences/Nuwara%20Eliya_pref_GE2010.pdf.
- ↑ "General Elections 2010 - Preferential Votes". சண்டே டைம்சு. 11 ஏப்ரல் 2010. http://www.sundaytimes.lk/100411/News/page1.pdf.