சார்ல்ஸ் நிர்மலநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சார்ல்ஸ் நிர்மலநாதன்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி வன்னி மாவட்டம்
பதவியில்
ஆகத்து 2015 – மார்ச் 2020
தொகுதி வன்னி மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு இருதயநாதன் சார்ல்ஸ் நிர்மலநாதன்
24 நவம்பர் 1975 (1975-11-24) (அகவை 48)
குடியுரிமை இலங்கையர்
தேசியம் இலங்கைத் தமிழர்
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இருப்பிடம் எழுதூர், மன்னார்

இருதயநாதன் சார்ல்சு நிர்மலநாதன் (Iruthayanathan Charles Nirmalanathan; பிறப்பு: 24 நவம்பர் 1975) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

நிர்மலநாதன் 1975 நவம்பர் 24 இல் பிறந்தார்.[1] இவர் பருத்தித்துறை, வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.[2] இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராவார்.[3][4]

அரசியலில்

நிர்மலநாதன் 2013 வடமாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டார். இவர் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளில் நான்காவதாக வந்ததால் வட மாகாண சபைக்குத் தெரிவாகவில்லை.[5][6] பின்னர் அவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் ததேகூ வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வன்னி மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் (34,620) பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[9][10][11]

தேர்தல் வரலாறு

சார்ல்சு நிர்மலநாதனைன் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2013 வடமாகாணசபை[6] மன்னார் மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யப்படவில்லை
2015 நாடாளுமன்றம்[12] வன்னி மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு
2020 நாடாளுமன்றம்[13] வன்னி மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Charles Nirmalanathan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/members-of-parliament/directory-of-members/viewMember/3247. பார்த்த நாள்: 25 September 2020. 
  2. "Sri Lanka - Committee Strengthening Programme: Report Summary". Commonwealth Parliamentary Association UK. July 2019. p. 13. https://www.uk-cpa.org/media/3187/sri-lanka-final-report-july-2019.pdf. பார்த்த நாள்: 25 September 2020. 
  3. Balachandran, P. K. (19 February 2017). "Tamil factionalism a key factor in Kepapilavu, Vavuniya agitations in Sri Lanka". தி நியூ இந்தியன் எக்சுபிரசு (Chennai, India). https://www.newindianexpress.com/world/2017/feb/19/tamil-factionalism-a-key-factor-in-kepapilavu-vavuniya-agitations-in-sri-lanka-1572423.html. பார்த்த நாள்: 25 September 2020. 
  4. Thambiah, Mirudhula (25 August 2015). "Tamils in N-E and plantations A paradigm shift in voting patterns". Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 4 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150904141819/https://ceylontoday.lk/52-101873-news-detail-tamils-in-n-e-and-plantations-a-paradigm-shift-in-voting-patterns.html. 
  5. 6.0 6.1 "Provincial Council Elections 2013 Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 24 September 2013 இம் மூலத்தில் இருந்து 10 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131210013145/http://www.dailynews.lk/political/provincial-council-elections-2013-preferential-votes. 
  6. "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 25 September 2020. 
  7. "General Election 2020: Preferential votes of Vanni District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100600/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-vanni-district. பார்த்த நாள்: 25 September 2020. 
  8. D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 25 September 2020. 
  9. Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 25 September 2020. 
  10. "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 25 September 2020. 
"https://tamilar.wiki/index.php?title=சார்ல்ஸ்_நிர்மலநாதன்&oldid=24265" இருந்து மீள்விக்கப்பட்டது