ஜீவன் தொண்டமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஜீவன் தொண்டமான்
நாடாளுமன்ற உறுப்பினர்
தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஆகத்து 2020
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தனிநபர் தகவல்
பிறப்பு ஜீவன் தொண்டமான்
9 நவம்பர் 1994 (1994-11-09) (அகவை 30)
குடியுரிமை இலங்கையர்
அரசியல் கட்சி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்
பிற அரசியல்
சார்புகள்
இலங்கை பொதுசன முன்னணி
படித்த கல்வி நிறுவனங்கள் நோர்த்தம்பிரியா பல்கலைக்கழகம், இங்கிலாந்து

ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman; பிறப்பு: 9 நவம்பர் 1994) இலங்கையின் மலையக அரசியல்வாதி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

ஜீவன் தொண்டமான் 1994 நவம்பர் 9 இல் பிறந்தார்.[2] இவர் முன்னாள் அமைச்சரும், தொழிற்சங்கத் தலைவருமான ஆறுமுகன் தொண்டமானின் மகனும், சௌமியமூர்த்தி தொண்டமானின் பூட்டனும் ஆவார்.[3] இவர் கொழும்பு, கேட்வே ஆரம்பப் பாடசாலை, சென்னை, ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோயம்புத்தூர் சின்மயா பன்னாட்டுப் பாடசாலையிலும் கல்வி கற்று,[2] இங்கிலாந்து நோர்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று 2017 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2][4] இலண்டனில் சிறிது காலம் சட்ட நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய பின்னர்,[2] தந்தையின் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் இணைந்து சேவையாற்ற விரும்பி இலங்கை திரும்பினார்.[2]

அரசியலில்

2020 சூன் மாதத்தில் தந்தை ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவிற்குப் பின்னர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாலராக நியமிக்கப்பட்டார்.[5][6] 2020 நாடாளுமன்றத் தேர்தலில், இலங்கை பொதுசன முன்னணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டு, மாவட்டத்திலேயே அதிகூடிய விருப்பு வாக்குகள் (109,155) பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[7][8][9]

ஜீவன் தொண்டமான் 2020 ஆகத்து 12 இல் கோட்டாபய ராஜபக்சவின் இரண்டாவது அமைச்சரவையில் தோட்ட வீடமைப்பு, சமூக உட்கட்டமைப்பு இராசாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[10]

தேர்தல் வரலாறு

தேர்தல் தொகுதி கட்சி வாக்குகள் முடிவு
2020 நாடாளுமன்றம் நுவரெலியா மாவட்டம் இலங்கை பொதுசன முன்னணி தெரிவு

மேற்கோள்கள்

  1. "Directory of Members: Jeevan Thondaman". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 D. B. S. Jeyaraj (18 July 2020). "CWC, Jeevan Thondaman and Nuwara- Eliya Tamils". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/CWC-Jeevan-Thondaman-and-Nuwara-Eliya-Tamils/172-192186. பார்த்த நாள்: 9 August 2020. 
  3. Padmasiri, Ranjith (9 August 2020). "Politics runs in their blood". Sunday Times (Colombo, Sri Lanka). http://www.sundaytimes.lk/200809/news/politics-runs-in-their-blood-411764.html. பார்த்த நாள்: 9 August 2020. 
  4. Ramiah Mohan, Sulochana (6 June 2020). "My father was not a saviour, but a strong leader - Jeevan Thondaman". Ceylon Today (Colombo, Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 15 ஜூலை 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200715163110/https://ceylontoday.lk/news/my-father-was-not-a-saviour-but-a-strong-leader-jeevan-thondaman. பார்த்த நாள்: 9 August 2020. 
  5. "Jeevan Thondaman appointed as CWC’s General Secretary". Daily News (Colombo, Sri Lanka). 17 June 2020. http://www.dailynews.lk/2020/06/17/political/220932/jeevan-thondaman-appointed-cwc%E2%80%99s-general-secretary. பார்த்த நாள்: 9 August 2020. 
  6. Rajapaksa, Ranjith (17 June 2020). "Jeevan Thondaman appointed as General Secretary of CWC". The Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/breaking_news/Jeevan-Thondaman-appointed-as-General-Secretary-of-CWC/108-190182. பார்த்த நாள்: 9 August 2020. 
  7. Srinivasan, Meera (8 August 2020). "An alliance of Malayaha Tamil MPs that stood out". தி இந்து (Chennai, India). https://www.thehindu.com/news/international/an-alliance-of-malayaha-tamil-mps-that-stood-out/article32306174.ece. பார்த்த நாள்: 9 August 2020. 
  8. Mallawaarachchi, Amali (8 August 2020). "Over 60 new MPs elected to House". Daily News (Colombo, Sri Lanka). https://www.dailynews.lk/2020/08/08/political/225355/over-60-new-mps-elected-house. பார்த்த நாள்: 9 August 2020. 
  9. "Jeevan Thondaman gets State Minister post". கொழும்பு கசெட். 12 August 2020. https://colombogazette.com/2020/08/12/jeevan-thondaman-gets-state-minister-post/. பார்த்த நாள்: 13 August 2020. 
"https://tamilar.wiki/index.php?title=ஜீவன்_தொண்டமான்&oldid=24190" இருந்து மீள்விக்கப்பட்டது