கோவிந்தன் கருணாகரன்
ஜனா கருணாகரன் | |
---|---|
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2020 | |
பதவியில் 1989–1994 | |
மட்டகக்ளப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2012–2017 | |
பொதுச் செயலாளர் தமிழீழ விடுதலை இயக்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2021 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கோவிந்தன் கருணாகரன் 1 அக்டோபர் 1963 |
அரசியல் கட்சி | டெலோ |
பிற அரசியல் சார்புகள் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு |
ஜனா என அழைக்கப்படும் கோவிந்தன் கருணாகரன் (Govinthan Karunakaran; பிறப்பு: 1 அக்டோபர் 1963), இலங்கைத் தமிழ் அரசியல்வாதி ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
கருணாகரன் 1963 அக்டோபர் 1 இல் பிறந்தார்.[1][2] செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்திலும், புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலையிலும் கல்வி கற்றார்.[2] தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளை அடுத்து இவர் 1983 ஆகத்து மாதத்தில் பாடசாலையை விட்டு வெளியேறி, 1983 நவம்பரில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) என்ற ஈழப் போராட்டக் குழுவில் இணைந்தார்.[2][3] ஆயுதப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டு, 1987 சூனில் அம்பாறை-மட்டக்களப்பு மாவட்ட டெலோவில் பிராந்தியத் தலைவரானார்.[2] பின்னர் டெலோவின் பொதுச் செயலாளரானார்.[2]
தேர்தல் அரசியலில்
கருணாகரன் 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எப்/டெலோ/தவிகூ வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.[4] 2012 மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்திஒல் போட்டியிட்டு கிழக்கு மாகாண சபை உறுப்பினரானார்.[5][6]
கருணாகரன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டுத் தெரிவாகவில்லை.[7][8] 2020 நாடாளுமன்றத் தேர்தலில் ததேகூ வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[9][10]
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
1989 நாடாளுமன்றம்[4] | மட்டக்களப்பு மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | ஈதேசவிமு/ஈபுவிமு/டெலோ/தவிகூ | தெரிவு | |||
2012 மாகாணசபை[11] | மட்டக்களப்பு மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | |||
2015 நாடாளுமன்றம் | மட்டக்களப்பு மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு செய்யப்படவில்லை | |||
2020 நாடாளுமன்றம்[10] | மட்டக்களப்பு மாவட்டம் | தமிழீழ விடுதலை இயக்கம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "Directory of Members: Govindan Karunakaram". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-members/viewMember/2393. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 de Silva, W. P. P.; Ferdinando, T. C. L.. 9th Parliament of Sri Lanka. Colombo Sri Lanka: Associated Newspapers of Ceylon Limited. பக். 268 இம் மூலத்தில் இருந்து 23 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150623233447/http://noolaham.net/project/148/14715/14715.pdf.
- ↑ D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ 4.0 4.1 "Results of Parliamentary General Election – 1989". Rajagiriya, Sri Lanka: Election Commission of Sri Lanka. p. 33. https://elections.gov.lk/web/wp-content/uploads/election-results/parliamentary-elections/general-election-1989.pdf. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Preferential votes". Daily News (Colombo, Sri Lanka). 10 September 2012. http://archives.dailynews.lk/2012/09/10/pol08.asp. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Eastern Province Chief Minister assumes duties". Sunday Times (Colombo, Sri Lanka). 30 September 2012. http://www.sundaytimes.lk/120930/news/eastern-province-chief-minister-assumes-duties-14666.html. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑
- ↑ 10.0 10.1 "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 13 September 2020.
- ↑ "Batticaloa preferences". Rajagiriya, Sri Lanka: Department of Elections. p. 1 இம் மூலத்தில் இருந்து 29 April 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140429080234/http://www.slelections.gov.lk/pdf/ele_2012/Candidates/Batticaloa%20preference.pdf.