ச. வியாழேந்திரன்
எஸ். வியாழேந்திரன் | |
---|---|
தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 12 ஆகத்து 2020 | |
கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் | |
பதவியில் 2 நவம்பர் 2018 – 15 திசம்பர் 2018 | |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு ஆகத்து 2020 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
பதவியில் ஆகத்து 2015 – மார்ச் 2015 | |
தொகுதி | மட்டக்களப்பு மாவட்டம் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சதாசிவம் வியாழேந்திரன் 25 சூலை 1993 |
அரசியல் கட்சி | இலங்கை பொதுசன முன்னணி |
பிற அரசியல் சார்புகள் |
சிறீலங்கா சுதந்திர மக்கள் கூட்டமைப்பு |
படித்த கல்வி நிறுவனங்கள் | கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை மதுரை காமராசர் பல்கலைக்கழகம் |
சதாசிவம் வியாழேந்திரன் (பிறப்பு: 25 சூலை 1993) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராசாங்க அமைச்சரும் ஆவார்.[1]
ஆரம்ப வாழ்க்கை
வியாழேந்திரன் செங்கலடி வெப்பவெட்டுவான் அரசினர் தமிழ்ப் பாடசாலையிலும், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.[2] பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2] அத்துடன் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[2]
அரசியலில்
வியாழேந்திரன் (அமல் எனவும் அழைக்கப்படுகிறார்) தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) உறுப்பினராவார்.[3] ஆசிரியராகப் பணியாற்றும் இவர் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் புளொட் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 39,321 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு முதன் முறையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[4][5][6]
2018 இலங்கை அரசியலமைப்பு நெருக்கடியின் போது, 2018 அக்டோபர் 26 இல் இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஐதேக தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து அகற்றி, முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை பிரதமராக அறிவித்தார்.[7] இதனை அடுத்து ராசபக்ச தனது பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ராசபக்சவின் தெரிவிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நிலையில்,[8] வியாழேந்திரன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கு ஆதரவளித்தார்.[9][10] இவருக்கு 2018 நவம்பர் 2 இல் ராசபக்சவின் அமைச்சரவையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.[11][12][13] 2018 நவம்பர் 14 இல் மகிந்த ராசபக்ச அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை அடுத்து இவர் பதவி இழந்தார்.
வியாழேந்திரன் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராசபக்ச தலைமையிலான பொதுசன முன்னணியின் வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 22,218 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.[14][15][16] இவருக்கு ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் சேவைகள், வெகுசன ஊடக, தொழில் அபிவிருத்தி இராசாங்க அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அமைச்சர் பதவியை 2020 ஆகத்து 12 இல் பொறுப்பேற்றுக் கொண்டார்.[17][18][19][20]
தேர்தல் வரலாறு
தேர்தல் | தொகுதி | கட்சி | கூட்டணி | வாக்குகள் | முடிவு | ||
---|---|---|---|---|---|---|---|
2015 நாடாளுமன்றம்[21] | மட்டக்களப்பு மாவட்டம் | style="background:வார்ப்புரு:People's Liberation Organisation of Tamil Eelam/meta/color;"| | தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் | தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு | தெரிவு | ||
2020 நாடாளுமன்றம்[22] | மட்டக்களப்பு மாவட்டம் | இலங்கை பொதுசன முன்னணி | தெரிவு |
மேற்கோள்கள்
- ↑ "Directory of Members: S. Viyalanderan". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 14 September 2020.
- ↑ 2.0 2.1 2.2 "More than 50 new faces in House". சண்டே டைம்சு. 23 ஆகத்து 2015.
- ↑ "TNA hands over nominations for all five districts of north and east". Tamil Diplomat. 10 July 2015. http://tamildiplomat.com/tna-hands-over-nominations-for-all-five-districts-of-north-and-east/.
- ↑
- ↑ "Ranil tops with over 500,000 votes in Colombo". டெய்லி மிரர். 19 ஆகத்து 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo.
- ↑ "Preferential Votes". டெய்லி நியூசு. 19 ஆகத்து 2015 இம் மூலத்தில் இருந்து 2015-08-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20150820025307/http://www.dailynews.lk/?q=political/preferential-votes-2.
- ↑ "Turmoil in Sri Lanka as ex-president Rajapaksa sworn in as PM". 27-10-2018.
{{cite web}}
: Check date values in:|date=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "ஜனாதிபதியின் செயற்பாடு சட்டவிரோதமானது - சுமந்திரன்". வீரகேசரி. 2 நவம்பர் 2018. http://www.virakesari.lk/article/43773. பார்த்த நாள்: 3 நவம்பர் 2018.
- ↑ "TNA MP joins govt. with UNP’s Nawinne". The Island (Colombo, Sri Lanka). 3 November 2018 இம் மூலத்தில் இருந்து 3 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181103003926/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=193778.
- ↑ "TNA MP defects to Rajapaksa". Tamil Guardian. 2 November 2018. https://www.tamilguardian.com/content/tna-mp-defects-rajapaksa. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑ "கிழக்கு மாகாண பிரதியமைச்சராக எஸ். வியாழேந்திரன் பதவியேற்பு". வீரகேசரி. 2 நவம்பர் 2018. http://www.virakesari.lk/article/43778. பார்த்த நாள்: 3 நவம்பர் 2018.
- ↑
- ↑ Goonewardene, Devuni (2 November 2018). "New ministers sworn in". நியூஸ் பெர்ஸ்ட் (Colombo, Sri Lanka). https://www.newsfirst.lk/2018/11/02/new-ministers-sworn-in/. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑
- ↑ "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑ "மட்டக்களப்பில் 16 அரசியல் கட்சிகளும் 22 சுயேச்சைக் குழுக்களும் பெற்றுக் கொண்ட வாக்குகள் ஒரே பார்வையில்". Battinews. 11 ஆகத்து 2020. http://www.battinews.com/2020/08/16-22.html.
- ↑ "Viyalendiran new Public Service State Minister". டெய்லி மிரர். 14 ஆகத்து 2020. http://www.dailymirror.lk/caption_story/Viyalendiran-new-Public-Service-State-Minister/110-193851.
- ↑
- ↑ Bandara, Kelum (13 August 2020). "newly sworn Cabinet: New MPs receive more executive authority in new government". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/print/front_page/newly-sworn-Cabinet:--New-MPs-receive-more-executive-authority-in-new-government/238-193734. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑ "New Cabinet sworn in". Daily News (Colombo, Sri Lanka). 12 August 2020. http://www.dailynews.lk/2020/08/12/local/225683/new-cabinet-sworn. பார்த்த நாள்: 14 September 2020.
- ↑ Jayakody, Pradeep (28 August 2015). "The Comparison of Preferential Votes in 2015 & 2010". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/85309/the-comparison-of-preferential-votes-in-2015-2010. பார்த்த நாள்: 20 September 2020.
- ↑ "General Election Preferential Votes". Daily News (Colombo Sri Lanka, Sri Lanka): p. 2. 8 August 2020. http://www.dailynews.lk/2020/08/08/political/225317/general-election-preferential-votes. பார்த்த நாள்: 20 September 2020.
- வாழும் நபர்கள்
- இலங்கையின் 15வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 16வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- மட்டக்களப்பு மாவட்ட நபர்கள்
- தமிழீழ மக்கள் விடுதலைக் கழக உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ் ஆசிரியர்கள்
- இருபத்தொராம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்
- இலங்கையின் இராசாங்க அமைச்சர்கள்
- இலங்கை பொதுசன முன்னணி அரசியல்வாதிகள்