ஏறாவூர்
ஏறாவூர் | |
---|---|
நகர் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | கிழக்கு |
மாவட்டம் | மட்டக்களப்பு |
பிரதேச செயலாளர் பிரிவு | ஏறாவூர் நகரம் |
ஏறாவூர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். மட்டக்களப்பு நகரில் இருந்து 15 கிமீ வடமேற்கே இந்த ஊர் அமைந்துள்ளது.
புவியியல் பின்னணி
இலங்கையின் கீழ்த் தீசைப்புறமாக அமைந்துள்ள மட்டக்களப்பின் வடமேற்கே சுமாா் 12 கிலோ மீற்றா்களுக்கப்பால் ஏறாவூா்ப் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் வடக்கே வங்கக் கடலையும், கிழக்கே “ஆறுமுகத்தான் குடியிருப்பு” எனும் தமிழ்க் கிராமத்தையும், மேற்கே செங்கலடிப் பிரதேசத்தையும், தெற்கே மட்டக்களப்புக் கடலோியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஏறாவூரின் கிழக்கு மேற்காக ஊடறுத்துச் செல்லும் புகையிரத, பிரதான வீதிகள் கிழக்கிலங்கையை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கின்றன[1]. இப்பிரதேசம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகின்றது.
இப்பிரதேசமானது வடகீழ்ப் பருவக் காற்று, உகைப்பு, சூறாவளி மூலம் மழையைப் பெறுகிறது. குறிப்பாக, ஒக்டோபா் முதல் ஜனவரி வரையிலான காலப் பகுதியில் வடகீழ் பருவக் காற்று மூலம் கூடிய மழையைப் பெற்றுக்கொள்கிறது.[2][3] இடையிடையே பெரும் வெள்ளப் பெருக்கும் ஏற்படுவதுண்டு. ஏப்ரல், ஆகஸ்ட் மாதங்களில் உகைப்பு மழையும்[4] கிடைக்கின்றது. இது தவிர, நவம்பர், டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடாவில் தோற்றம்பெறும் அயன்மண்டல சூறாவளி மூலமும் கணிசமானளவு மழை வீழ்ச்சி 864 மில்லி மீற்றருக்கும் 3081 மில்லி மீற்றருக்கும் இடைப்பட்டதாகும்.[5]
இப்பிரதேசம் தாழ் நாட்டு உலா் வலயத்தில் அமைந்திருப்பதால் வெப்பநிலையும் உயர்வாகக் காணப்படுகின்றது. வடக்கே கடலும், தெற்கே மட்டக்களப்பு கடலேரியும் காணப்படுவதால் வெப்பநிலை மட்டுப்படுத்தப்படுகிறது. வருடாந்த சராசரி வெப்பவீச்சு 25 பாகை “சீ”க்கும் 27.2 “சீ”க்கும் இடைப்பட்டதாகும்.[6]
மிகக்குறைந்த ஆழத்திலேயே தரைக்கீழ் நீரைக் கொண்டுள்ள ஏறாவூா் பிரதேசம் சமதரையான நில அமைப்பைக் கொண்டதாகும். தென்னை, பனை, பூவரசு, முருங்கை, வேம்பு போன்ற மரங்களே இப்பிரதேசத்தின் பௌதீக கால நிலைத் தன்மைகேற்ப பிரதானமாக வளர்கின்றன.
பாடசாலைகள்
- மட்/அறபா வித்தியாலயம்
- மட்/ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயம்
- மட்/அலிகார் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)
- மட்/ அல் அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை
- மட்/ றகுமானியா மகா வித்தியாலயம்
- மட்/ முனிறா பாலிகா வித்தியாலயம்
- மட்/ அல் ஜூப்ரியா வித்தியாலயம்
- மட்/ மாக்கான் மாக்கார் வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
- மட்/ அப்துல் காதர் வித்தியாலயம்
- மட்/ அஸ்ரப் வித்தியாலயம்
- மட்/ ஹிஸ்புல்லா வித்தியாலயம்
- மட்/ அமீர் அலி வித்தியாலயம்
- மட்/ மச்நகர் அரசினர் கலவன் பாடசாலை
வணக்கத்தலங்கள்
- முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாயல்
- ஏறாவூர் கணேச காளிகா ஆலயம் / ஏரூர் மாகாளி
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2013-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130707173548/http://www.eravurtown.ds.gov.lk/.
- ↑ http://www.unitar.org/unosat/maps/76
- ↑ http://www.unitar.org/unosat/node/44/2134?utm_source=unosat-unitar&utm_medium=rss&utm_campaign=maps
- ↑ கூடுதலான வெயிற் காலங்களில் பகல் நேரத்தில் கூடுதலான ஆவியாக்கம் நடைபெற, மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்தல்.
- ↑ STATISTICAL HAND BOOK -1995, KACHCHERI,BATTICALOA.
- ↑ STATISTICAL HAND BOOK -1995, KACHCHERI,BATTICALOA.