சாணக்கியன் இராசமாணிக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சாணக்கியன் இராசமாணிக்கம்
Shanakiya Rasamanickam

நாடாளுமன்ற உறுப்பினர்
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஆகத்து 2020
தொகுதி மட்டக்களப்பு மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம்
20 செப்டம்பர் 1990 (1990-09-20) (அகவை 34)
அரசியல் கட்சி இலங்கைத் தமிழரசுக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

சாணக்கியன் ராகுல் ராசபுத்திரன் இராசமாணிக்கம் (Shanakiyan Ragul Rajaputhiran Rasamanickam, பிறப்பு: 20 செப்டம்பர் 1990) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

சாணக்கியன் 1990 செப்டம்பர் 20 இல் பிறந்தார்.[1] இவர் முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் சி. மூ. இராசமாணிக்கத்தின் பேரன் ஆவார்.[2][3] இவர் கண்டி திரித்துவக் கல்லூரியில் கல்வி பயின்றார்.[3]

அரசியல் வாழ்க்கை

இவர் முன்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளராக இருந்தவர்.[4][5] இவர் ராசபக்ச ஆட்சியின் ஆதரவாளராகவும், துணை இராணுவக் குழுத் தலைவர் பிள்ளையானின் ஆதரவாளராகவும் செயல்பட்டவர்.[4] இவர் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[2]

சாணக்கியன் 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) வேட்பாளராக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6][7] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[8][9][10]

தேர்தல் வரலாறு

சாணக்கியன் இராசமாணிக்கத்தின் தேர்தல் வரலாறு
தேர்தல் தொகுதி கட்சி கூட்டணி வாக்குகள் முடிவு
2015 நாடாளுமன்றம் மட்டக்களப்பு மாவட்டம் இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி தெரிவு செய்யப்படவில்லை
2020 நாடாளுமன்றம்[9] மட்டக்களப்பு மாவட்டம் இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவு

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Directory of Members: Shanakiyan Rajaputhiran Rasamanickam". Sri Jayawardenepura Kotte, Sri Lanka: இலங்கை நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 7 September 2020.
  2. 2.0 2.1 D. B. S. Jeyaraj (8 August 2020). "TNA suffers electoral setback in North and East polls". Daily Mirror (Colombo, Sri Lanka). http://www.dailymirror.lk/opinion/TNA-suffers-electoral-setback-in-North-and-East-polls/172-193440. பார்த்த நாள்: 7 September 2020. 
  3. 3.0 3.1 "Social media praise for New TNA MP’s trilingual speaking ability displayed in his maiden speech in Parliament". NewsWire (Nugegoda, Sri Lanka). 4 September 2020. http://www.newswire.lk/2020/09/04/social-media-praise-for-new-tna-mps-trilingual-speaking-ability-displayed-in-his-maiden-speech-in-parliament/. பார்த்த நாள்: 7 September 2020. 
  4. 4.0 4.1 "Sri Lanka’s big Facebook spenders". Tamil Guardian. 4 August 2020. https://www.tamilguardian.com/content/sri-lanka%E2%80%99s-big-facebook-spenders. பார்த்த நாள்: 7 September 2020. 
  5. "Rajaputhran for Paddiruppu, Arundika for Wennappuwa". Sri Lanka Mirror (Nugegoda, Sri Lanka). 21 February 2013 இம் மூலத்தில் இருந்து 31 அக்டோபர் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211031181743/http://archive.srilankamirror.com/news/5445-rajaputram-for-padirpuwa-arundika-for-wennappuwa. பார்த்த நாள்: 7 September 2020. 
  6. "Ranil tops with over 500,000 votes in Colombo". The Daily Mirror (Colombo, Sri Lanka). 19 August 2015. http://www.dailymirror.lk/83949/ranil-tops-with-over-500-000-votes-in-colombo. பார்த்த நாள்: 7 September 2020. 
  7. 9.0 9.1 "General Election 2020: Preferential votes of Batticaloa District". Ceylon Today (Colombo, Sri Lanka). 7 August 2020 இம் மூலத்தில் இருந்து 27 அக்டோபர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201027100203/https://ceylontoday.lk/news/general-election-2020-preferential-votes-of-batticaloa-district. பார்த்த நாள்: 7 September 2020. 
  8. Parasuraman, Lakshme (9 August 2020). "Over 60 new faces in Parliament". Sunday Observer (Colombo, Sri Lanka). http://www.sundayobserver.lk/2020/08/09/news-features/over-60-new-faces-parliament. பார்த்த நாள்: 7 September 2020.